செம ஹாட்டு மச்சி.. சேலையில் ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு சேலையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் அப்லோடான சிறிது நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகிறது.
ரஜினிகாந்துடன் நெற்றிக்கண் படத்தில் நடித்த மேனகாவுக்கும் மலையாள இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சுரேஷ் குமார் தம்பதியினரின் மகள் தான் கீர்த்தி.
இவர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திற்கு பிறகு, செல்வராகவனுடன் சாணிக்காகிதம் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் வெற்றி பெறாத காரணத்தினால் தற்போது மார்க்கெட்டை இழந்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவுக்கு கொழுக்கு மொழுக்கு நடிகையாக என்ட்ரி கொடுத்தார். கணிசமான படங்களில் நடித்து வந்த அவர் திடீரென டயட்டை பாலோ செய்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். பட வாய்ப்புக்காக உடல் எடை குறைந்த அம்மணிக்கு அதன் பிறகு தான் படங்களே சரியாக அமையாமல் போனது.

அடிக்கடி வதந்தியில்
கீர்த்தி சுரேஷ் நடித்த, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா, வாஷி என அடுத்தடுத்து வெளியான அனைத்துப்படங்களும் அவரின் காலை வாரிவிட்டன. இதனால், அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரவியது. அதுமட்டுமில்லாமல், இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வருவதாகவும், ஒட்டல் உரிமையாளர் ஒருவரை காதலிப்பதாகவும் வதந்திகள் பரவின.

கருப்பு சேலையில்
இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், கருப்பு புடவையில், குஷிபட ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. கருப்பு சேலைக்கு எடுப்பாக வெள்ளை முத்துக்களால் ஆன மணியை கழுத்தில் அணிந்துள்ளார்.

கைவசம் உள்ள படங்கள்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதே போல, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன், போல சங்கர் படத்தில் சிரஞசீவின் தங்கையாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











