கீர்த்தி சுரேஷின் முதல் சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. அந்த படத்துக்குப் பிறகு வாய்ப்பே வரலையா?
சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி 'ரகு தாத்தா’ திரைப்படம் வெளியானது. சியான் விக்ரமின் தங்கலான் மற்றும் டிமான்ட்டி காலனி 2 படங்களுடன் தைரியமாக தனது படத்தை கீர்த்தி சுரேஷ் பெரும் நம்பிக்கையுடன் கிளாஷ் விட்டார். ஆனால், அந்த படத்தை ரசிகர்கள் கண்டுக்கவே இல்லாமல் போனதும் படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனங்களை கொள்ளையடித்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரெமோ, சீமராஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அடுத்து பாலிவுட்டில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது.
ரகு தாத்தா படுதோல்வி: இந்தி திணிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான கலாச்சார திணிப்புகளை மையப்படுத்தி உருவான ரகு தாத்தா படத்தை கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான ஹம்பாலே தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை கவராத நிலையில், படுதோல்வியை சந்தித்தது. இதுவரை வெறும் 65 லட்சம் தான் அந்த படம் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் சம்பளம்: நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு அவர் வாங்கும் சம்பளம் அளவுக்கு கூட அவர் நடிக்கும் படங்கள் ஓடுவதில்லை என்பது தான் ரொம்பவே சோகமான விஷயமாக உள்ளது. 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்கும் உமன் சென்ட்ரிக் படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் சம்பளம்: நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது 3 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார். படங்கள் ஓடினாலும் சரி, ஓடவில்லை என்றாலும் சரி அவருக்கான சம்பளம் குறையாது என்றே கூறுகின்றனர். ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும் போது, ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் பேக் ஸ்டேஜில் உடைகளை சரி செய்யும் நபராக வேலை பார்த்தாராம். அப்போது, அவருக்கு சம்பளமாக 500 ரூபாய் கொடுக்கப்பட்டது தான் தனக்கு கிடைத்த முதல் சம்பளம் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு: தெலுங்கில் மகாநடி என்றும் தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரிலும் வெளியான சாவித்ரியின் பயோபிக் திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. ஆனால், அந்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு சுமார் 6 மாதங்கள் எந்தவொரு பட வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டதாம். வீட்டிலேயே சாப்பிட்டு, ஓய்வெடுத்து, காரில் லாங் டிரைவ் செய்து வந்தாராம். அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை கொடுக்க சினிமா இயக்குநர்கள் தயங்கியது தான் காரணமாக இருக்கலாம் என்றார். அதன் பின்னர் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தில் தான் ஒப்பந்தம் ஆனதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











