கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா டீசர்.. கோலமாவு கோகிலா வாடை வருதே.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: ஒரு காலத்தில் நடிகைகளின் உமன் சென்ட்ரிக் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தொடர்ந்து அவர்கள் நல்ல நல்ல படங்களை கொடுக்காமல் சொதப்பிய நிலையில், ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக அவர்களை ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள். நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர், அதே போன்ற நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இதுவரை அந்த அளவுக்கான பர்ஃபார்மன்ஸ் கிடைக்கவில்லை.
விஜய்யின் அட்மினாக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்துள்ள ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இதுவரை பெரிதாக வரவேற்பையே பெறவில்லை.

பார்க்க அப்படியே கோலமாவு கோகிலா படத்தை போலவே உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இந்த படமாவது அவருக்கு கை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரிவால்வர் ரீட்டா டீசர்: மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பினன்ர் நடிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும், அந்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. பாலிவுட்டுக்கு சென்ற நிலையிலும் பேபி ஜான் படமும் ஃபிளாப் ஆகிவிட்டது. உமன் சென்ட்ரிக் படங்களை அதிகம் நம்பி வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
எப்போ ரிலீஸ்?: ஜே.கே. சந்துரு இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்புராயன், அஜய் கோஷ், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படம் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி ரிலீஸாக வெளியாகிறது. நேற்று வெளியான இந்த டீசர் இதுவரை வெறும் 80 ஆயிரம் வியூஸ் மட்டுமே அள்ளி இருக்கிறது. கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரகு தாத்தா திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், இந்த படம் அவருக்கு கம்பேக் கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











