»   »  அட்ராசக்க: விஜய்யை அடுத்து சூர்யாவுடன் ஜோடி சேர்கிறாராமே கீர்த்தி சுரேஷ்

அட்ராசக்க: விஜய்யை அடுத்து சூர்யாவுடன் ஜோடி சேர்கிறாராமே கீர்த்தி சுரேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் அவருக்கு கீர்த்தி சுரேஷை ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

சூர்யா சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் அதாவது எஸ்.3 படத்தில் பிசியாக உள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு அவர் முத்தையாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது.

Keerthy Suresh to romance Suriya?

முத்தையாவின் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். கீர்த்தி தற்போது விஜய் 60 படத்தில் இளைய தளபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கீர்த்தி சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரெமோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தனுஷுடன் தொடரி படத்திலும் நடித்துள்ளார். தொடரி இந்த மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

சூர்யாவை வைத்து அப்பா சென்டிமென்ட் கதையை படமாக்குகிறாராம் முத்தையா. கபாலி இயக்குனர் ரஞ்சித்தும் சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
It is reported that Keerthy Suresh will be Suriya's love interest in his upcoming movie to be directed by Muthaiah.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil