»   »  பாம்பு சட்டை படத்தில் கீர்த்தியின் உடையை பார்த்தால் அப்படியே 'ஷாக்' ஆகிடுவீங்க!

பாம்பு சட்டை படத்தில் கீர்த்தியின் உடையை பார்த்தால் அப்படியே 'ஷாக்' ஆகிடுவீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்பு சட்டை படத்தில் கீர்த்தி சுரேஷ் கிழிந்த உடையுடன் நடித்துள்ளாராம்.

இது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில் தொடரி படம் தோல்வி அடைந்தது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் முதலில் வெளியாக வேண்டிய படம் பாம்பு சட்டை.

பாம்பு சட்டை

பாம்பு சட்டை

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள பாம்பு சட்டை படம் பல்வேறு பிரச்சனைகளால் தள்ளித் தள்ளிப் போய் தற்போது தான் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

பாம்பு சட்டை படத்தில் நடிக்கும்போது கீர்த்தி புதுமுகம். ஆனால் அந்த படம் வெளியாவதற்குள் அவரின் பிற படங்கள் ரிலீஸாகி இன்று கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உள்ளார்.

கிழிந்த சட்டை

கிழிந்த சட்டை

இது என்ன மாயம், ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் கலர் கலராக உடையணிந்து அழகாக வந்தார் கீர்த்தி. தொடரியில் மட்டும் பாவாடை சட்டையில் வந்தார். இந்நிலையில் பாம்பு சட்டை படத்தில் கிழிந்த பாவாடை, தாவணியில் வருகிறாராம்.

தயக்கம்

தயக்கம்

கோலிவுட்டின் டாப் நாயகியாக இருக்கும் இந்த நேரத்தில் அதுவும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த நேரத்தில் பாம்பு சட்டை ரிலீஸாவதால் தனது இமேஜ் டேமேஜாகிவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் கீர்த்தி.

English summary
Keerthy Suresh is appearing in Paambhu Sattai movie in torn clothes. Fans who have seen her in colourful costumes will definitely be shocked.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil