என்னது பூ சூப்பரா இருக்கா?.. அடப்பாவி.. கீர்த்தி சுரேஷை அப்செட் ஆக்கிய ரசிகர்.. ரொம்ப ஃபீல் செய்றாங்க

சென்னை: கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதெல்லாம் வாங்கியிருந்தார். கடைசியாக அவர் தமிழில் ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்தார். அந்தப் படம் தோல்வியடைந்தது. அடுத்ததாக அவர் கன்னிவெடி படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது க்யூட் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவருக்கான மார்க்கெட்டை உயர்த்தியது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அவற்றில் சில படங்கள் வெற்றியடைந்தன; சில படங்கள் தோல்வியடைந்தன. ஆனாலும் கீர்த்தியின் நடிப்புக்கும், அழகுக்கும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் கூடிக்கொண்டே சென்றார்கள். தமிழ் போலவே தெலுங்கிலும் தனது தடத்தை பதித்து வெற்றிகரமாக வலம் வர ஆரம்பித்தார்.

தேசிய விருது: அந்தவகையில் நடிகையர் திலகம் என கொண்டாடப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநடி படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பை பார்த்து அனைவருமே மிரண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். முழுக்க முழுக்க சாவித்திரியாகவே அவர் மாறிவிட்டார். அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அப்படத்தின் வெற்றியும் அவருக்கான மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

Keerthy Suresh s Cute Reaction to Fan s Goes Viral During Tamil Nadu Govt Award Event
Photo Credit:

காதல் திருமணம்: இது ஒருபக்கம் இருக்க கீர்த்தி சுரேஷையும் இன்னும் சில செலிபிரிட்டிகளையும் சேர்த்து வைத்து தொடர்ந்து காதல் கிசுகிசுவை கிளப்பிவிட்டுக்கொண்டிருந்தார்கள். அதற்கு அவர் பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை. ஆனால் அந்த கிசுகிசுக்கள் எல்லாம் எல்லை மீறி போனதை பார்த்த அவர்; தனது காதலரான ஆண்டனி தட்டிலை பொதுவெளிக்கு அறிமுகம் செய்துவைத்தார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு கோவாவில் வைத்து திருமணமும் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்துவருகிறார்.

ஹிட் எதுவும் இல்லை: இதற்கிடையே தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேசமயம் அப்படத்தில் ஒரு பாடலில் கிளாமர் ஆட்டம் போட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமணத்துக்கு பின்பு தொடர்ந்து நடித்துவந்தாலும் எதிர்பார்த்த வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அவர் கடைசியாக நடித்த ரிவால்வர் ரீட்டா, உப்பு கப்புரம்பு ஆகிய படங்கள் தோல்வியைத்தான் சந்தித்தன. அடுத்ததாக கன்னிவெடி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பாம்பு சட்டைக்கு விருது: இந்நிலையில் சமீபத்தில் பாம்பு சட்டை படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசு விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொள்வதற்காக அவர் சென்றார். அப்போது தான் தங்கியிருந்த இடத்திலிருந்து புடவை கட்டிக்கொண்டு பூ வைத்துக்கொண்டு காருக்கு வந்த அவரை பார்த்து, 'மேடம் பூ சூப்பரா இருக்கு' என ஒரு ரசிகர் சொல்ல; அதிர்ச்சியாகி பார்த்த கீர்த்தி, 'என்னது பூ சூப்பரா இருக்கா?.. அடப்பாவி ரெடி ஆகி வந்தா லுக் சூப்பரா இருக்குனு சொல்வானு பார்த்தா பூ சூப்பரா இருக்குனு சொல்றானே' என அப்செட்டோடு கூறிவிட்டு சென்றார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X