உனக்கு பாயாசம் வேண்டுமா?.. பாட்டியிடம் வம்பு செய்த கீர்த்தி சுரேஷ்.. அட செம குறும்பா இருக்காங்களே
சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வெளியானது. ஹீரோயினை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வரலாம் என தெரிகிறது. இந்நிலையில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். ஹீரோவுடன் டூயட் மட்டும் பாடும் ஹீரோயினாக இல்லாமல் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்தார். அதன் காரணமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ஆனால் அந்த் தேசிய விருது அவரது மார்க்கெட் உயர்வுக்கு எந்த விதமான உதவியையும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
திருமணம் செய்துகொண்ட கீர்த்தி: இதற்கிடையே கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அவர் ஆண்ட்னி தட்டில் என்ற தனது நண்பரை காதலித்து வந்திருக்கிறார். அந்தக் காதலை பொதுவெளிக்கு தெரியாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த அவர் கடந்த 2024ஆம் ஆண்டு அவரையே கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் கோலாகலமாக நடந்தது. விஜய், திரிஷா உள்ளிட்டோர் எல்லாம் அதில் கலந்துகொண்டார்கள்.

திருமணத்துக்கு பின்பும் நடிப்பு: திருமணமாகிவிட்டாலும் தொடர்ந்து நடிப்பது என முடிவில் இருக்கிறார் அவர். அதனால்தான் திருமணத்தை முடித்த கையோடு ஹிந்தியில் அவர் நடித்திருந்த பேபி ஜான் படத்துக்கு தீவிரமாக ப்ரோமோஷன் செய்தார். அதை பார்த்து சினிமா மீது கீர்த்திக்கு இவ்வளவு காதலா என ஆச்சரியமடைந்தார்கள். அவர் தொடர்ந்து நடிப்பதற்கு கணவரின் சப்போர்ட்டும் முழுமையாக இருப்பதால் பல இயக்குநர்களிடம் அவர் கதை கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
தோல்விடைந்த ரிவால்வர் ரீட்டா: கடைசியாக அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் வெளியானது. ராதிகா உள்ளிட்டோர் எல்லாம் அப்படத்தில் நடித்திருந்தார். ஹீரோயினை சுற்றி கதை நகரும்படியாகத்தான் அந்தப் படத்தை இயக்குநர் இயக்கியிருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தப் படம் கண்டிப்பாக மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று எதிர்பார்த்திருந்த கீர்த்திக்கு இந்தத் தோல்வி பெரிய அப்செட்டை கொடுத்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
ட்ரெண்டாகும் வீடியோ: சினிமாவில் இப்படி பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவ்வாக இருப்பார் கீர்த்தி. அந்தவகையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தனது பாட்டியுடன் அமர்ந்து விருந்து சாப்பிடுகிறார் அவர். அப்போது அவருடைய பாட்டி, எனக்கு பாயாசம் வேண்டும் என்று கேட்க; எதற்காக பாயாசம் வேண்டும் என ஜாலியாக கேட்க; அதற்கு பாட்டி க்யூட் ரியாக்ஷனோடு அப்பளத்தை நொறுக்கி சாப்பிட என விளக்கமளிக்கும் காட்சிகள் இருக்கின்றன. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











