ஏன் இப்படி? எங்களுக்கு பழைய முகம்தான் வேணும்... ஆளே மாறிய கீர்த்தி... அநியாய கவலையில் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் ஆளே மாறிய நிலையில் வெளியிட்டுள்ள போட்டோக்களை கண்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழில், இது என்ன மாயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
முன்னணி நடிகையாக இருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் இப்போது பிசியாக நடித்து வருகிறார்.

தேசிய விருது
முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இளம் வயதில் தேசிய விருது பெற்ற அவருக்கு பல நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி.

இந்தி மைதான்
இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்திலும் அவர் ஒப்பந்தம் ஆனார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இது. இதில், அஜய் தேவகன், ஹீரோ. அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகக் இருந்தது. படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

பெருமையாக
இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை பேசும் சினிமா. உலகம் அறிந்து கொள்ள வேண்டிய படம். நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது என்று கூறியிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார்.
View this post on InstagramA post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on
திடீர் விலகல்
இந்நிலையில் இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென்று விலகினார். இதற்கு அவர் உடல் எடையை குறைத்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க கீர்த்தி, உடல் எடையை குறைத்ததன் மூலம் ஒல்லியாகத் தெரிந்ததால், படத்தில் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வனில் இருந்தும் அவர் விலகியிருந்தார்.
View this post on InstagramA post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on
ஆளே மாறியிருக்கிறார்
இந்நிலையில், அவர் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே மாறியிருக்கிறார். மிகவும் ஒல்லியாக, பழைய அழகு குறைந்து வேறு தோற்றத்தில் இருக்கிறார். இதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் கவலையாக கமென்ட் அடித்துள்ளனர்.
டயட்ல இருக்காதீங்க
இது மாஸ் இல்ல... மரண மாஸ் என்று ரசிகர் ஒருவர் பாராட்டி இருந்தாலும் பலரும் கவலையில் அவரை கேள்வி கேட்டுள்ளனர். 'ரொம்ப டயட்ல இருக்காதீங்க... இருந்தா இப்படித்தான் ஆகும்' என்று ஒருவர் அட்வைஸ் செய்துள்ளார். பல ரசிகர்கள், எங்களுக்கு பழைய அந்த கீர்த்திதான் வேண்டும். அவரை மிஸ் பண்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு ஒல்லியா?
இன்னொரு ரசிகர், 'இது யாருப்பா, இவ்வளவு ஒல்லியா?' என்று வியப்பாகக் கேட்டுள்ளார். ஒரு ரசிகர், என்னாச்சு? முகம் ஒரு மாதிரியா இருக்கு? ஏன் இப்படியாயிட்டீங்க? என்று ஆச்சரியப்பட்டுள்ளார். கீர்த்தி, உங்களது அந்த க்யூட்னஸ் எங்க போச்சு? கரோனா தாக்கிடுச்சா? என்று விசாரித்துள்ளார் ஒருவர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











