அவர் கொடுத்த காதல் கடிதம்.. ஞாபகமாக வைத்துள்ளேன்.. கீர்த்தி சுரேஷின் சீக்ரெட் லவ் ஸ்டோரி !

சென்னை : கீர்த்தி சுரேஷ் தனக்கு ஒருவர் கொடுத்த காதல் கடிதங்களை இன்னும் அவரின் ஞாபகமாக பத்திரமாக பூட்டி வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரின் மிரட்டலான நடிப்பில் வெளியான பெண் குயின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தெலுங்கு தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சீக்ரெட் லவ் பற்றி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நம்பர் ஒன் நடிகையாக

நம்பர் ஒன் நடிகையாக

பிரபல தமிழ் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக உலா வந்த கீர்த்தி தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் "இது என்ன மாயம் " படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகைகளில் முன்னணியில் இருக்கிறார்.

லீட் ரோலில் நடித்து

லீட் ரோலில் நடித்து

பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப் போட்டு வந்த கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக நடிகை சாவித்ரியின் வரலாற்று படமான "நடிகையர் திலகம் " படத்தில் லீட் ரோலில் நடித்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லமல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒருசேர வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விருதையும் இவருக்கு பெற்று தந்தது.

அதீத வரவேற்பு

அதீத வரவேற்பு

நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் லீட் ரோலில் இவர் நடித்த பெண் குயின் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் அதீத வரவேற்பை பெற்றது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.

காதல் கடிதம் குறித்து

காதல் கடிதம் குறித்து

இப்போதுள்ள லாக்டவுன் நேரத்தில் பல படங்களின் பிரபலமான காட்சிகளும், நடிகர் நடிகைகளின் பேட்டிகளும் சமூக வலைத்தளங்களில் சுற்றி வரும் நிலையில் கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர் ராணா தொகுத்து வழங்கிய அந்த பேட்டியில் தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளுமாறு

திருமணம் செய்து கொள்ளுமாறு

அதில் அவர் கூறியதாவது தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு கிப்ட் பாக்ஸ் கொடுத்தாகவும் அந்த கிப்ட் பாக்ஸை திறந்து பார்த்தபோது, அதில் என்னுடைய புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் மற்றும் ஒரு காதல் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும், அதில் என் மீது கொண்ட காதலை அவர் அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார்.

தூக்கிப் போட மனமின்றி

தூக்கிப் போட மனமின்றி

தான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவர் கூட எனக்கு காதல் கடிதம் கொடுத்ததில்லை, அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமின்றி இன்னும் அவரின் ஞாபகமாக பத்திரமாக பூட்டி வைத்துள்ளேன் என வெக்க பட்டு கொண்டே அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த அறிய பேட்டியை பார்த்த கீர்த்தியின் ரசிகர்கள் இந்த வீடியோவை தாறு மாறாக ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X