அவர்லாம் தெறிச்சிடுவாரு பாஸ்.. பக்கமே வரமாட்டாரு.. கணவரை பங்கம் செய்த கீர்த்தி சுரேஷ்

சென்னை: திருமணத்துக்கு பிறகும் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் இப்போது ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் நவம்பர் 28ஆம் தேதி ரிலீஸாகிறது. திருமணத்துக்கு பிறகு கீர்த்தியின் மார்க்கெட் டல்லடித்திருக்கும் நிலையில் இப்படம் ரிலீஸாகி மீண்டும் அதனை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது கணவர் பற்றி அவர் பேசியிருக்கும் விஷயம் கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நண்பர் ஆண்டனி தட்டிலை கடந்த 15 வருடங்களாக காதலித்தார். தங்களது காதலை ரொம்பவே ரகசியமாக வைத்திருந்த அவர்; கடந்த வருடத்தில் வேறு வழியில்லாமல் பொதுவெளியில் சொன்னார். ஏனெனில் அவரை சுற்றி ஏகப்பட்ட காதல் கிசுகிசுக்கள் கிளம்பிக்கொண்டே இருந்தன. காதலை சொன்ன கையோடு கோவாவில் வைத்து அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய், திரிஷா என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகும் பிஸி: திருமணம் நடந்தபோதே அவர் ஹிந்தி படமான பேபி ஜான் படத்தில் நடித்து முடித்திருந்தார். எனவே திருமணம் முடிந்த கையோடு அந்தப் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியானார். அதனைப் பார்த்து பலரும், அட புது பொண்ணு ஹனிமூனுக்கு போகாமல் ப்ரோமோஷனில் கலந்துகொள்கிறாரே என்று ஆச்சரியம்தான் பட்டார்கள். மேலும் சில படங்களில் நடிப்பதற்காக கதைகளையும் கேட்க செய்கிறார்.

Keerthy Suresh s funny reply about her husband entering films goes viral ahead of Revolver Rita release
Photo Credit:

மார்க்கெட் டல்தான்: இருந்தாலும் திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷுக்கு இப்போது மார்க்கெட் டல்லாக இருப்பதாகவே தெரிகிறது. தற்போது அவரது கைவசம் ரிவால்வர் ரீட்டா படம் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஜே.கே.சந்துரு என்பவர் இயக்கியிருக்கிறார். ராதிகா, ரெடின் கிங்ஸ்லி, கல்யாண் மாஸ்டர் என பலர் நடித்திருக்கிறார்கள். நவம்பர் 28ஆம் தேதி பிரமாண்டமாக படம் ரிலீஸாகவிருக்கிறது.

எப்படி இருக்கும் படம்?: இப்படம் ரிலீஸாகி டல்லான கீர்த்தியின் மார்க்கெட்டை உயர்த்தும் என்பது ட்ரெய்லரை பார்த்த பிறகு அவரது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. முக்கியமாக இக்கதை ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட் என்பதால்தான் அந்த நம்பிக்கை அவர்களுக்கு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கும் கீர்த்தி; சமீபத்தில் இப்படத்துக்காக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கணவர் பற்றி பேசிய விஷயம் கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கணவர் பற்றி கீர்த்தி சுரேஷ்: அந்த செய்தியாளர் சந்திப்பில் அவரிடம், உங்கள் கணவர் திரைத்துறையில் நடிப்பாரா இல்லை தயாரிப்பாளராக மாறுவாரா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அவர்லாம் இங்கே வந்தால் தெறிச்சிடுவாரு. அவருக்கும் இதுக்கும் சுத்தமாக செட்டே ஆகாது. தயாரிப்பாளராக மாறும் ஐடியாவா? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. விளம்பர படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததுதான். ஆனால் அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X