கீர்த்தி சுரேஷ் பழங்குடியினப் பெண்ணாக நடிக்கும் குட்லக் சகி ரிலீஸ் தேதி அவுட் !

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் தங்கையாக நடித்துள்ளார்.

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது இயக்குனராக நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் குட்லக் சகி என்ற படத்தில் பழங்குடியினப் பெண்ணாக நடித்துள்ளார்.

குட்லக் சகி டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதே சமயம் தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையிலும் பல படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை

எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை

மூத்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகா நடியில் நடித்ததன் மூலம் தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ் அதை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளான பெண் குயின் மற்றும் மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். மகாநடி இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது ஆனால் அதைத் தொடர்ந்து நடித்த பெண் குயின் மற்றும் மிஸ் இந்தியா திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.

கீர்த்தி சுரேஷ் பழங்குடியின பெண்ணாக

கீர்த்தி சுரேஷ் பழங்குடியின பெண்ணாக

இந்த நிலையில் தெலுங்கு மொழியில் உருவாகி தமிழ், மலையாளம், ஹிந்தி,கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ள குட்லக் சகி என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்துள்ளார். இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார். மேலும் துப்பாக்கி சுடுவதில் வல்லவராகவும் வருகிறார். நடிகர் ஆதி மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குட்லக் சகி ரிலீஸ் தேதி

குட்லக் சகி ரிலீஸ் தேதி

கீர்த்தி சுரேஷ் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ள குட்லக் சகி டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூழலில் சில மாதங்களுக்கு முன்பே இப்படம் வெளியாக இருந்தது ஆனால் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. வரும் நவம்பர் 26ஆம் தேதி குட்லக் சகி திரையரங்குகளில் வெளியாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X