கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்... புதிய தேதி அறிவிப்பு!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையே தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்ததாக குட்லக் சகி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
குட்லக் சகி நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த சூழலில் இப்பொழுது தேதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்
தொடர்ந்து முன்னனி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து ஹிட்டுகளை கொடுத்து வந்த கீர்த்தி சுரேஷ் மகாநடி என்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் வென்றதோடு தேசிய விருதையும் வென்றார். மகாநடி கொடுத்த உத்வேகத்தை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார்

ரஜினிகாந்துக்கு தங்கையாக
அந்த வகையில் பெண் குயின் மற்றும் மிஸ் இந்தியா உள்ளிட்ட திரைப்படங்கள் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாகின. பெரும்பாலான நடிகைகள் அவ்வளவு எளிதில் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது முன்னணி நடிகையாக இருக்கும்போதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார்

வசூல் சாதனைகளை
சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவான அனைத்து திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இன்றுவரை பல்வேறு வசூல் சாதனைகளை செய்து வருகிறது. தமிழில் ரஜினிகாந்துக்கு எப்படி தங்கையாக நடித்தாரோ அதேபோல் தெலுங்கிலும் சிரஞ்சீவிக்கு தங்கையாக இப்பொழுது போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்

துப்பாக்கி சுடும் வீராங்கனையாக
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் குட்லக் சகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பழங்குடியின பெண்ணை பற்றி உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். ஆதி, ஜெகபதி பாபு, ராகுல் ராதாகிருஷ்ணா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்க நாகேஷ் குகுநூர் இப்படத்தை இயக்கியுள்ளார். இது இவருக்கு அறிமுக படமாகும்.
Recommended Video

புதிய ரிலீஸ் தேதி
தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மூன்று மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இப்பொழுது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 10 ஆம் தேதி குட்லக் சகி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது


Click it and Unblock the Notifications











