ஓ என்ட ஓமன பெண் குட்டி.. கீர்த்தி சுரேஷின் அடுத்த அவதாரம் !
சென்னை : மோகன் லாலின் மரக்கர் அரபிகடலிண்டே சிம்ஹாம் படத்தில் கீர்த்தி சுரேஷ் கேரள பாரம்பரிய உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
மலையாள திரைப்பட உலகில் தனது திரை வாழ்க்கை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ். இதன் பின் இது என்ன மாயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் நடித்த சில படங்களிலேயே ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ. விஜய்யுடன் பைரவா, சர்கார் என இங்கு நடித்து கொண்டு இருந்த வேளையில், தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். அங்கு இவரது மார்கெட் உயர்ந்தது.
இதன் பின் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே சமயத்தில் மகாநதி என்று தெலுங்கிலும் நடிகையர் திலகம் என்று தமிழிலும் திரைப்படம் வெளியானது. கீர்த்தி சுரேஷ் நடிப்பது அவர் ஆடும் போது அவரின் சிரிப்பு போன்ற பலவற்றை ரசிகர்கள் கலாய்த்து தள்ளினார். ஆனால் இந்த ஒரு திரைப்படம் அவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இந்த படத்திற்காக பெற்றார் கீர்த்தி.

இவரது நடிப்பை பார்த்து கலாய்த்த வாய்கள் எல்லாம் வாய் அடைத்து போனது. அந்த அளவிற்கு இவரது நடிப்பு மிகவும் பாராட்டும் விதமாகவே இருந்தது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி.
தற்போது மோகன் லால், சுனில் செட்டி, மஞ்சு வாரியர், பிரபு, அர்ஜுன் என ஒரு நட்சத்திர பட்டாளங்களே மரக்கர் அரபிகடலிண்டே சிம்ஹாம் படத்தில் நடித்து வருகின்றன இதில் கீர்த்தியும் நடிக்கிறார். கேரளா நாட்டு பாரம்பரிய மிக்க ஒரு பெண்ணாக படத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ஆன்லைனில் டிரெண்டாகி வருகிறது. இதனை பார்த்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் ஒ என்ட ஓமன பெண் குட்டி என்று கொஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











