twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்க எதை வைத்து கலாய்க்கிறீர்களோ அது தான் கீர்த்தி வெற்றியின் ரகசியமாம்!

    By Siva
    |

    Recommended Video

    Actress Keerthy Suresh: கீர்த்தி சுரேஷின் தொழில் ரகசியம் தெரிய வந்துள்ளது- வீடியோ

    சென்னை: கீர்த்தி சுரேஷின் தொழில் ரகசியம் தெரிய வந்துள்ளது.

    கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாக உள்ளார். போனி கபூர் தயாரிக்கும் பாலிவுட் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    இந்நிலையில் அவரின் தொழில் ரகசியம் குறித்து அவரே தெரிவித்துள்ளார்.

    கதாபாத்திரம்

    கதாபாத்திரம்

    பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி. சில, பல நேரங்களில் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமே இருக்காது. சும்மா வந்து சிரித்து, காதலித்துவிட்டு செல்வார். இது என்ன இந்த கீர்த்தியின் கதாபாத்திரம் டம்மியா என்று ரசிகர்கள் கேட்டது உண்டு.

    கீர்த்தி

    கீர்த்தி

    பார்க்கும் நமக்கே கீர்த்தியின் கதாபாத்திரத்திற்கு வெயிட் இல்லை என்பது தெரியும் போது படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் அவருக்கு தெரியாமல் இருக்குமா?. அவர் தனது கதாபாத்திரத்தை விட கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறாராம். நல்ல கதை உள்ள படத்தில் நடித்தாலே போதும் என்ற கொள்கை வைத்துள்ளார் கீர்த்தி.

    ரகசியம்

    ரகசியம்

    கீர்த்தி நடித்த படங்கள் வெற்றி பெற்றாலும் அவை அதன் ஹீரோக்களுக்காகத் தான் ஓடின என்று கூறப்படும். யாருக்காக படம் ஓடினால் என்ன படம் ஓடுகிறது அல்லவா, அது போதும் என்பது தான் கீர்த்தியின் வெற்றியின் ரகசியமாம்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    தன் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும் என்று கீர்த்தி எதிர்பார்ப்பது இல்லையாம். கதாபாத்திரம் வெயிட்டாக இருந்து கதை நன்றாக இல்லை என்றால் படம் ஓடாது என்று நம்புகிறார் கீர்த்தி. அவர் சொல்வதும் சரி தானே.

    English summary
    Keerthy Suresh gives more importance to story rather than her character in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X