கேமரா எடுத்தவர் பாவம்.. கீர்த்தி சுரேஷ் செய்த செயலால் என்ன நடந்தது பாருங்க.. செம சேட்டை போங்க

சென்னை: கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவரும் அவரது நடிப்பில் வெளியான ரிவால்வர் ரீட்டா திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அப்படத்தை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்திருந்தார். அப்படத்தின் தோல்வி கீர்த்தி சுரேஷுக்கு பெரிய அப்செட்டை கொடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

மலையாள திரையுலகத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம்தான் கீர்த்திக்கு முதல் படம். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து சரசரவென்று முன்னேறினார்.

தேசிய விருது: கிளாமர் ரோல்களுக்கு கடிவாளம் போட்டு நடித்த கீர்த்தி மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்று அசத்தினார். தேசிய விருது வென்றதன் காரணமாக மலைபோல் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ட்விஸ்ட் அடிக்கும் விதமாக அதற்கு பிறகுதான் அவருக்கான சான்ஸ்கள் குறைந்தன. இது கண்டிப்பாக அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்ததுதான்.

Keerthy Suresh s Viral Video From Revolver Rita Promotions Trends After Film s Failure
Photo Credit:

மீண்டும் அந்த கீர்த்தி சுரேஷ்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம் அவர் மீண்டும் பெரிய ரவுண்டு வர வழி வகுத்து கொடுத்தது. தொடர்ந்து சைரன், ரகுதாத்தா போன்ற படங்களில் நடித்த அவர் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். என்ட்ரி கொடுத்தது மட்டுமின்றி ஒரு பாடலுக்கு கிளாமர் விருந்தே வைத்திருந்தார் கீர்த்தி. அது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தாலும் பாலிவுட் போனாலும் இப்படி நடப்பது வழக்கமான ஒன்றுதான்.

திருமணம் செய்துகொண்ட கீர்த்தி: இதற்கிடையே அவர் தனது நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்ய முடிவெடுத்து கோவாவில் வைத்து திருமணமும் செய்துகொண்டார். ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அத்திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. மணம் முடித்த பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் கீர்த்தி கடைசியாக ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்திருந்தார். அப்படத்தை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்திருந்தார்.

கீர்த்தி வீடியோ: படத்தின் கதை, திரைக்கதை என எதுவுமே ஒர்க் அவுட் ஆகாததால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகாவின் நடிப்பு மட்டும் கொஞ்சம் ஆறுதல் கொடுப்பதாக இருந்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது இப்படத்தின் ப்ரோமோஷனின்போது கையில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த அவர் எதார்த்தமாக சுட்டுவிட; எதிரில் கேமரா பிடித்திருந்த நபர் மீது அந்த துப்பாக்கியின் குண்டு பட்டுவிட; உடனே கீர்த்தி பதறுகிறார். இதனைத்தான் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், என்ன மேடம் இவ்வளவு சேட்டைக்காரியா இருக்கீங்க என்று கமெண்ட்ஸ் செக்‌ஷனில் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X