என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா… ரஜினிக்கு தங்கச்சியா நடிக்க இவ்வளவு சம்பளமா?
சென்னை : அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்க எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தீபாவளிக்கு வெளியான இத்திரைப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், அண்ணாத்த படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்த்து வருகின்றனர்.

அண்ணாத்த
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் அண்ணாத்த தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்தது. தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது,

எதிர்மறை விமர்சனம்
ரஜினியின் 168வது படமான 'அண்ணாத்த' படம் விமர்சன ரீதியாகக் கடும் எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது. பலரும் அரதப் பழைய காட்சிகளைக் கொண்ட படம் என்று தங்களுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள். இருப்பினும் இந்த திரைப்படம் வெளியான இரண்டே நாளில் 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

அண்ணன் தங்கை பாசம்
அண்ணன் தங்கை பாசத்தை மையக்கருவதாக கொண்டு இத்திரைப்படம் உருவாகி உள்ளதால் இத்திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் ,இப்படத்தில் குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு முறை பெண்களாக நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி வேட்டி சட்டையில் கிராமத்து பின்னணி கதைக்களத்தில் நடித்துள்ளார்.
Recommended Video

இவ்வளவு சம்பளமா
இந்நிலையில், இத்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடித்ததற்காக ரூ.2 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ அதே அளவு சம்பளத்தை தங்கை கதாபாத்திரத்திற்கும் வாங்கி உள்ளார். கீர்த்தி சுரேஷின் சம்பளத்தை கேட்ட ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











