அன்றைய நாள்.. சமந்தா எதை பற்றியும் யோசிக்கவே இல்லை.. கீர்த்தி சுரேஷ் சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களை கொடுத்த சூழலில்; சமந்தா பற்றி கீர்த்தி சுரேஷ் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. .
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.
தேசிய விருது: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்
ரகுதாத்தா: மாமன்னன் படம் அவருக்கு தமிழில் நல்ல ரீ என்ட்ரியாக அமைந்தது. அதனையடுத்து அவர் நடித்த சைரன் படம் தோல்வியை சந்தித்த சூழலில்; கடைசியாக ரகுதாத்தா படம் வெளியானது. ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றாலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இதன் காரணமாக கீர்த்தி கொஞ்சம் அப்செட் என்றே திரையுலகில் பேச்சு எழுந்திருக்கிறது.
சமந்தா பற்றி பேட்டி: அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா, பேபி ஜான் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் சமந்தா குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கும் சமந்தாவுக்கும் ஒரே ஆள்தான் மேனேஜர். அவர் மூலமாகத்தான் நாங்கள் பழக்கமானோம். ஒருமுறை நான் எனது ஃப்ரெண்ட்ஸோடு துபாய்க்கு ட்ரிப் சென்றிருந்தேன். அப்போது சமந்தாவும் அங்கிருந்தார். அது எனக்கு தெரிந்தவுடன் ஃபோன் செய்து, நான் எனது ஃப்ரெண்ட்ஸோடு வந்திருக்கிறேன். ஃப்ரீயாக இருந்தால் வாங்க மீட் பண்ணலாம் என்று சொன்னேன்.
அவர் எதைப் பற்றியும் அன்றைய தினம் யோசிக்கவே இல்லை. உடனே கிளம்பி வந்தார். எனது ஃப்ரெண்ட்ஸோடு ஜாலியாக பேசிவிட்டு சென்றார். அவரது படங்கள் எப்போது வந்தாலும் நான் அவரை தொடர்புகொண்டு பேசுவேன். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி மெசேஜ் செய்து பேசிக்கொள்வோம்” என்றார்.


Click it and Unblock the Notifications











