தனுஷ் முதல் சிரஞ்சீவி வரை.. அந்த விஷயத்தில் விஜய் தான் பெஸ்ட்.. பளிச்சென சொன்ன கீர்த்தி சுரேஷ்!
சென்னை: மலையாளத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான பைலட்ஸ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அச்சனே எனக்கு இஷ்டம், குபேரன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
பிரபல தென்னிந்திய நடிகையான மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். மோகன்லால் நடித்து 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயன் உடன் ரெமோ, விஜய்யுடன் பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
விஜய் தான் ஃபேவரைட்: தமிழ் சினிமாவில் விஜய்யுடன் இணைந்து பைரவம் மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு மிகவும் பிடித்த நடிகர்களில் விஜய் தான் ரொம்பவே ஃபேவரைட் என பல தருணங்களில் கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
சிறந்த டான்ஸர்: தனுஷ் சிறந்த டான்ஸரா? நானி சிறந்த டான்ஸரா? என கேட்க, தனுஷ் தான் பதில் அளிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என ஒவ்வொரு நடிகராக மாற்றிக் கொண்டே வந்தார். இறுதியில் அல்லு அர்ஜுனா? சிரஞ்சீவியா என வந்த கேள்விக்கு சிரஞ்சீவி தான் பிடிக்கும் என்றார். சிரஞ்சீவியா? விஜய்யா? என கடைசியாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சற்றும் யோசிக்காமல் விஜய் தான் பெஸ்ட் டான்ஸர் என கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார்.
வதந்திக்கே விஜய் தான் பதில்: நடிகை கீர்த்தி சுரேஷுக்கு துபாய் நபருடன் திருமணம் ஆகப் போகிறது, கேரளாவில் உள்ள அரசியல்வாதியை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார். சில நடிகர்களுடன் தொடர்பு இருக்கிறது என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், வதந்திக்கு விளக்கம் சொன்னால் அது உண்மையாகிவிடும் என விஜய் சொன்னதை வைத்தே வதந்தி பற்றிய கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் பதிலளித்திருந்தார்.
விஜய் அட்மின் தயாரிப்பில்: ரகு தாத்தா படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அட்மினாக இருந்து தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ள ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ரிவால்வர் ரீட்டா படத்தில் லீடு ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், விஜய்யின் தம்பி நான் தான் என சொல்லிக் கொள்ளும் அட்லீ தயாரிப்பில் இந்தி படமான பேபி ஜான் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
கடைசி படத்தில்: மீண்டும் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தளபதி 69 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமந்தாவை விஜய்க்கு ஜோடியாக்க எச். வினோத் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











