எனது காதல் விஜய்க்கு ஏற்கனவே தெரியும்?.. டாப் சீக்ரெட் சொன்ன கீர்த்தி சுரேஷ்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த வருடம் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் நடந்தது. இதில் விஜய், அட்லீ, அவரது மனைவி பிரியா, நடிகைகள் திரிஷா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்தச் சூழலில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது காதல் குறித்து பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் நடிகையாக இருந்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் ஹீரோயினாக கோலிவுட்டுக்குள் வந்தார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் கீர்த்திக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்திக்கொண்டு முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, விக்ரம் என வரிசையாக நடித்தார். அவற்றில் சில படங்கள் ஹிட்டாகின, சில படங்கள் தோல்வியடைந்தன.

vijay keerthy suresh

தேசிய விருது: சூழல் இப்படி இருக்க நடிகையர் திலகம் என்று போற்றப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மகாநடி என்ற பெயரில் உருவானது. அதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். முதலில் இந்த கேரக்டருக்கு அவர் செட் ஆவாரா என்று ரசிகர்கள் யோசித்தனர். ஆனால் தனது நடிப்பின் மூலம் தரமான பதிலடி கொடுத்த அவர்; அந்தப் படத்துக்காக தேசிய விருதையும் வென்று அசத்தினார். அதனையடுத்து மீண்டும் தமிழில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

ஹிந்தியில் என்ட்ரி: தமிழ், தெலுங்கில் நடித்துவந்த அவர் ஹிந்தியில் பேபி ஜான் படத்தின் மூலம் அறிமுகமானார். இது தெறி படத்தின் ரீமேக் என்பதும் அட்லீ தயாரித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வருண் தவான், கீர்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான அந்தப் படம் மோசமான தோல்வியையே சந்தித்தது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறார் என்று தொடர்ந்து கூறப்பட்ட சூழலில்; தான் ஆண்டனி தட்டில் என்பவரை காதலிக்கிறேன் கோவாவில் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினார் கீர்த்தி.

கோலாகல திருமணம்: அவர் சொன்னபடியே டிசம்பர் 12ஆம் தேதி அவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு ஹனிமூன் எங்கும் செல்லாமல் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அவர். அவர் அளித்த பேட்டியில், "எனக்கும் ஆண்டனிக்கும் ஏழு வயது வித்தியாசம்.

விஜய்க்கு தெரியும்: அவர் எனக்கு கணவராக கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மீடியா முன்பு வருவதற்கே அவர் வெட்கப்படுவார். அவரை நான் காதலித்தது சினிமாவில் ஏற்கனவே விஜய், அட்லீ, பிரியா, விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் உள்ளிட்டோருக்கு தெரியும். இந்தக் காதலை நாங்கள் இத்தனை வருடம் ரகசியமாக வைத்திருந்ததை நினைத்து எங்களுக்கே உச்சக்கட்ட ஆச்சரியமாகத்தான் இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X