முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷுக்கு அப்படி ஒரு சம்பவம்.. இத்தனை வருடங்கள் கழித்து ஓபன் செஞ்சிருக்காங்க

சென்னை: கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவரும் அவரது கைவசம் இப்போது ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. அவரது நடிப்பு பயணத்துக்கு ஆண்டனி முழு சப்போர்ட்டை கொடுத்துவருகிறார். இந்நிலையில் தனது முதல் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை அவர் பகிர்ந்திருக்கிறார்.

மலையாள திரையுலகத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம்தான் கீர்த்திக்கு முதல் படம். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து சரசரவென்று முன்னேறினார்.

தேசிய விருது: கிளாமர் ரோல்களுக்கு கடிவாளம் போட்டு நடித்த கீர்த்தி மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்று அசத்தினார். தேசிய விருது வென்றதன் காரணமாக மலைபோல் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ட்விஸ்ட் அடிக்கும் விதமாக அதற்கு பிறகுதான் அவருக்கான சான்ஸ்கள் குறைந்தன. இது கண்டிப்பாக அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்ததுதான்.

Keerthy Suresh shared her first film experience in an interview
Photo Credit:

மீண்டும் அந்த கீர்த்தி சுரேஷ்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம் அவர் மீண்டும் பெரிய ரவுண்டு வர வழி வகுத்து கொடுத்தது. தொடர்ந்து சைரன், ரகுதாத்தா போன்ற படங்களில் நடித்த அவர் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். என்ட்ரி கொடுத்தது மட்டுமின்றி ஒரு பாடலுக்கு கிளாமர் விருந்தே வைத்திருந்தார் கீர்த்தி. அது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தாலும் பாலிவுட் போனாலும் இப்படி நடப்பது வழக்கமான ஒன்றுதான்.

திருமணம் செய்துகொண்ட கீர்த்தி: இதற்கிடையே அவர் தனது நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்ய முடிவெடுத்து கோவாவில் வைத்து திருமணமும் செய்துகொண்டார். ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அத்திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. மணம் முடித்த பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் கீர்த்தி; தனது முதல் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட ஒரு சம்பவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

கீர்த்தி சுரேஷ் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "எனது திரைப்பயணம் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்திலிருந்துதான் தொடங்கியது. அந்தப் படத்தை இயக்கியவர் ப்ரியதர்ஷன். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் இப்போதும் எனக்கு நியாபகம் இருக்கிரது. அதாவது ஒரு சீனை எடுத்த பிறகு அவர் என்னை கண்டபடி திட்டிவிட்டார். அவர் திட்டியதை கேட்டு எனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுதான் முதல் படம் வேறு. அவரை பொறுத்தவரை அவருக்கு எல்லோருமே ஒரே மாதிரிதான். தனது மகள் கல்யாணி அந்த இடத்தில் இருந்திருந்தால்கூட அப்படித்தான் திட்டியிருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X