அடக்கொடுமையே.. கீர்த்தி சுரேஷை தாக்கிய குடிகார இளைஞர்.. அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்ற போது திடீரென குடிகார இளைஞர் ஒருவர் அவரை தாக்கியதாக சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் மாமன்னன் படம் வெளியானது. இந்த ஆண்டு சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட தமிழ் படங்களும், அட்லீ தயாரிப்பில் வருண் தவான் உடன் இணைந்து நடித்து வரும் பேபி ஜான் எனும் இந்தி படமும் வெளியாக உள்ளது.
ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் 108 படத்தில் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், போலீஸ் நிலையம் சென்ற ரியல் லைஃப் அனுபவம் இருக்கா என்கிற கேள்விக்கு இப்படியொரு பயங்கரமான விஷயத்தை கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

சென்னை பொண்ணு: நடிகை மேனகா சுரேஷின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். மலையாளி குடும்பமாக இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் பிறந்தது சென்னையில் தான். குழந்தையில் இருந்தே மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர் போன்ற மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பின்னர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது பாலிவுட்டுக்கும் சென்றுள்ளார்.
ஜெயம் ரவியின் சைரன் 108 படத்தில்: ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் 108 படத்தில் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அந்த படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி நடித்துள்ளார். நேற்று இரவு படத்தின் அட்டகாசமான டிரெய்லரும் வெளியானது. வரும் பிப்ரவரி 16ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. அதுதொடர்பான புரமோஷன்களில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அத்துமீறிய குடிகார இளைஞர்: ஒருமுறை சாலையில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்த போது திடீரென இளைஞர் ஒருவர் என் தோளில் கை போட்டார். அவர் ரொம்பவே குடிச்சி இருந்தார். செம கோபம் வந்துடுச்சு ஓங்கி பளார்னு ஒரு அறை விட்டுட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றோம். கொஞ்ச நேரத்துல ஏதோ ஒண்ணு தலையில வந்து மோதியது மாதிரி இருந்தது. அப்படியே காதெல்லாம் கொய்ன்னு கேட்டுச்சு திரும்பி பார்த்தால், அதே இளைஞர் என் தலையில் பலமாக தாக்கி விட்டு ஓடுகிறார்.
போலீஸ் ஸ்டேஷனில் பிடித்துக் குடுத்தேன்: அப்பவும் சும்மா விடலயே, நானும் என் ஃபிரெண்டும் ஓடிப் போய் அவனை புடிச்சி, பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல பிடித்துக் கொடுத்தோம் என தனக்கு நேர்ந்த பயங்கரமான அனுபவத்தை கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் ஷேர் செய்துள்ளார்.
கலாய்க்கும் ரசிகர்கள்: ஆனால், இது ஆக்ஷன் மேடம் என்றும் கதை நல்லா இருக்கு எந்த படத்தோட சீன் என சொல்லவில்லையே என கீர்த்தி சுரேஷ் சொன்னதை நம்பாமல் பல நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











