Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ்க்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சா? டப்பிங் ஸ்டூடியோவில் என்ன நடந்தது?
ஹைதராபாத்: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் உப்பு கப்பு ரம்பு. இந்த படத்தை அனி.ஐ.வி. சசி இயக்கியுள்ளார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் நாளை அதாவது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் டப்பிங் போது எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தைத் தாய் மொழியாக கொண்டவராக இருந்தாலும், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக தூள் கிளப்பி வருகிறார். கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தாலும் அவ்வப்போது தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் படங்கள் அமைந்தால் அதை மிஸ் செய்யாமல் நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த நடிகையர் திலகம் படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது.
இவர் நடித்த சாணி காகிதம் படம் இவரது ஆக்ஷன் மற்றும் ஆக்ரோஷமான நடிப்புக்கு உதாரணமாக உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான ரகு தாத்தா படத்திற்கு தியேட்டரில் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் ஓடிடி தளத்தில் அதிகம் கிடைத்தது. சாணி காகிதம் படத்தில் இவரது ஆக்ரோஷமான நடிப்பை பார்த்த இவரது காதலர் அந்தோணி, கீர்த்தி சுரேஷின் அருகில் செல்லவே பயப்பட்டாராம். இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம்: கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் தனது காதலர் அந்தோணியை திருமணம் செய்து கொண்டார். பள்ளி காலத்தில் இருந்து இவர்களுக்கு இடையில் காதல் இருந்து வந்தது அவர்களின் திருமணத்தின் போது தான் தெரியவந்தது. இது மட்டுமல்லாமல், அவர்களின் திருமணம் கிருஸ்த்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடைபெற்றது. திருமணத்திற்கு தென்னிந்திய திரை பிரபலங்கள் தொடங்கி, பாலிவுட் பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டார்கள். அவர்களின் திருமணத்திற்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஒரே பிரைவேட் ஜெட்டில் சென்றது பேசு பொருளாக மாறியது.
டப்பிங்கிலும் கெட்டிக்காரி: கீர்த்தி சுரேஷ் ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் விஜய்யின் தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ததில், சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்பு தேடி வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் எந்த அளவுக்கு கெட்டிக்காரியோ அதைவிட ஒரு மடங்கு கூடுதலான திறமையை அவர் டப்பிங்கிலும் கொண்டுள்ளார் என்பதற்கு பல படங்களை உதாரணமாக கூறலாம்.

ஹார்ட் அட்டாக்கா? : இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்து நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள படமான 'உப்பு கப்பூரம்பு' படத்தின் டப்பிங்கின் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பார்ப்பதற்கே செம காமெடியாக உள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த வீடியோவுக்கு கீர்த்தி சுரேஷ் " டப்பிங் ஸ்டூடியோவில் இருந்த அனைவரும் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டதோ என கட்டாயம் நினைத்திருப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த வீடியோ பதிவுக்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் ரசிகர்கள் வாரி வழங்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











