Keerthy Suresh: கல்யாணத்திற்கு முன் காதலருடன் வேற மாதிரி.. கீர்த்தி சுரேஷைப் பார்த்து ஏங்கும் இளசுகள்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகிகளில் ஒருவர். கடந்த ஆண்டு கிருஸ்துமஸுக்கு இவர் இந்தியில் முதன் முதலாக நடித்த பேபி ஜான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், கீர்த்தி சுரேஷ் குறித்து பரவலான பேச்சு திரையுலகில் இருந்தது. இப்படியான நிலையில், இவர் தனது காதலரை கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கோவாவில் நடைபெற்ற திருமணத்திற்கு முன்னர் நடைபெற்ற சில நிகழ்வுகளின் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

keerthy suresh keerthy suresh wedding

நடிகை கீர்த்தி சுரேஷ், தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகைகளில் ஒருவர். பல படங்களில் தரமான நடிப்பினை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு என்றுதான் கூறவேண்டும். காரணம், ரகு தாத்தா என்ற படத்தின் மையக் கதாபாத்திரமாக நடித்திருந்தார். படம் தியேட்டரில் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றாலும், ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அதன் பின்னர் இந்தியில், பேபி ஜான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

keerthy suresh keerthy suresh wedding

இது மட்டும் இல்லாமல், டிசம்பர் 12ஆம் தேதி தனது பள்ளிக் காலத்தில் இருந்து காதலித்து வந்த, அந்தோனி தட்டிலைத் திருமணம் செய்து கொண்டார். என்னதான் இந்திய அளவில் கவனிக்கப்படும் திரைப்பிரபலமாக இருந்தாலும், கீர்த்தி சுரேஷின் பெற்றோர் அவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பல ஆண்டுகளாக போராடி, தங்களது காதலுக்கு சம்மதம் வாங்கி, திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

keerthy suresh keerthy suresh wedding

கீர்த்தி சுரேஷ்: இவர்களது திருமணம் கோவாவில் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் குறிப்பாக, தென்னிந்திய திரைப்பிரபலங்கள் தொடங்கி, பாலிவுட் திரைப்பிரபலங்கள் வரை நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர். குறிப்பாக நடிகர் விஜய் தனி விமானத்தில் சென்னையில் இருந்து கோவாவிற்குச் சென்றார். அவருடன் நடிகை த்ரிஷாவும் சென்றார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு ஒன்றாக சென்றது, தனி புகைச்சலைக் கிளப்பியது.

keerthy suresh keerthy suresh wedding

விஜய்: மணமக்களை விஜய் வாழ்த்தியது மட்டும் இல்லாமல், அவர்களின் தல பொங்கல் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கீர்த்தி சுரேஷுக்கு தென்னிந்திய பிரலபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்துகளை இப்போது வரை தெரிவித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் இந்து முறைப்படியும் கிருஸ்துவ முறைப்படியும் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்களை இவர்களே பகிர்ந்தனர்.

keerthy suresh keerthy suresh wedding

இளசுகள்: இப்படியான நிலையில், திருமணத்திற்கு முன் தினம் இரவு, கோவாவில் கோலாகலமான இசைக் கச்சேரி நடைபெற்றுள்ளது. அதில் மணமக்களான கீர்த்தி சுரேஷ், அந்தோனி தட்டில் என இருவரும் தங்களது செல்லப் பிராணியுடன் பெரும் மகிழ்ச்சியுடன் நடனமாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தற்போது இந்தத் தம்பதியர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதனைப் பார்த்த இளசுகள் தங்களது காதலும் கை கூடவேண்டும் என ஏங்கி வருகின்றார்கள்.

keerthy suresh keerthy suresh wedding

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X