அத்துமீறிய நபர்.. ரோட்டில் வைத்து பளார் விட்ட கீர்த்தி சுரேஷ்.. அவரே சொன்ன ஷாக் நியூஸ்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் கொடுத்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

Keerthy Suresh Maamannan Revolver Rita

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.

தேசிய விருது: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: இதற்கிடையே தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவருக்கு மாமன்னன் திரைப்படம் மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்தது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு சைரன் படத்தில் நடித்த அவருக்கு தோல்வியே கிடைத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. அதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் ஹிந்தி தொடர்பான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

பாலிவுட் என்ட்ரி: மேலும் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்திலும் நடித்துவருகிறார் அவர். அந்தப் படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் தவிர்த்து ரிவால்வர் ரீட்டா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் பேட்டி: மாமன்னன் பட ரிலீஸ் சமயத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நானும் எனது தோழியும் சாலையில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது குடித்துவிட்டு ஒருவன் எனது மேல் வேண்டுமென்றே சாய்ந்தான். நான் எதுவுமே யோசிக்காமல் பளார் என்று ஒரு அறை விட்டேன். பிறகு நாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவன் எனது கழுத்தில் அடித்துவிட்டு ஓடிவிட்டான். நானும் எனது தோழியும் விடவில்லை. அவனை துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து ஒருநாள் ஸ்டேஷனில் வைத்துவிட்டுத்தான் வெளியில் அனுப்பினோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X