இது கீர்த்தி சுரேஷ்னு சொன்னால் மீம்ஸ் கிரியேட்டர்ஸே நம்ப மாட்டாங்களே!
சென்னை: பாலிவுட் செல்லும் கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷை போனி கபூர் அஜய் தேவ்கனை வைத்து தயாரிக்கும் பாலிவுட் படத்தில் நடிக்க வைக்கிறார். பாலிவுட் செல்ல உள்ள நிலையில் கீர்த்தி தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்தார்.
பாலிவுட் நடிகைககள் குச்சி, குச்சியாக இருக்கும் நிலையில் தான் பூசினாற் போன்று சென்றால் நன்றாக இருக்காது என்று நினைத்தாரோ என்னவோ.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷுக்கு அழகே அவர் பூசினாற் போன்று இருப்பது தான். சொல்லப் போனால் தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது அவர் கூடுதலாக வெயிட் போட்டு அதை குறைக்க கஷ்டப்பட்டதாக எல்லாம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கீர்த்தி தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

ஒர்க்அவுட்
எடையை குறைத்த பிறகு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில் சில புகைப்படங்களை பார்த்தால் அய்யோ பாவம், யாரு பெத்த பிள்ளையோ இப்படி நோஞ்சானாக இருக்கிறதே, யாராவது சாப்பாடு வாங்கிக் கொடுக்கக் கூடாதா என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

ஒல்லி
கீர்த்தி சுரேஷ் ஒல்லியாக ஆனது நன்றாகத் தான் இருக்கிறது. இருப்பினும் அவருக்கு அழகே பூசினாற் போன்று இருப்பது தான். அதனால் தான் கீர்த்தி ஒல்லியானதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்களோ புது கான்செப்ட் கிடைத்துவிட்டது என்று குஷியாகியுள்ளனர்.

ரகுல் ப்ரீத் சிங்
முன்னதாக இலியானா, ரகுல் ப்ரீத் சிங், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் அஜய் தேவ்கன் ஜோடியாக இந்தி படங்களில் நடித்துள்ளனர். அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த தே தே பியார் தே படம் அண்மையில் ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் மற்றொரு நாயகியான தபுவை தான் பாராட்டினார்களே தவிர பாவம் ரகுல் ப்ரீத் சிங்கை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் தேவ்கன்
சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தவர் அஜய் தேவ்கன். தமிழ் சிங்கமான சூர்யாவுடன் நடித்த கீர்த்தி தற்போது இந்தி சிங்கத்திற்கு ஜோடியாகியுள்ளார். கீர்த்தி தனது அப்பா வயதான அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். அஜய் தேவ்கனுக்கு 50 வயதாகிறது, கீர்த்திக்கு 26 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











