இவங்க கீர்த்தி சுரேஷா.. இல்லை அவங்க தங்கச்சியா.. பாவம் இப்படி மெலிஞ்சிட்டாங்களே!
Recommended Video
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என வரும் விவேக் காமெடிக்கு தற்போது கன கச்சிதமாக பொருந்துவார் கீர்த்தி சுரேஷ். அந்த அளவுக்கு ஸ்லிம்மாகி உள்ளார்.
பாலிவுட் படமான மைதான் படத்திற்காகத் தான் இந்த அளவுக்கு உடல் எடையை குறைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது வெளியாகியுள்ள ஸ்லிம் கீர்த்தி சுரேஷின் க்யூட்டான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சு என பதறி போய் கமெண்ட் செய்து வரும் வேடிக்கையை நீங்களே பாருங்கள்.
நல்லா இல்லை
சில பேர் குண்டான நல்லாருக்காது.. சில பேர் இளைச்சா நல்லாருக்காது என கீர்த்தி சுரேஷின் ஸ்லிம் புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன் கமென்ட் செய்துள்ளார்.
என்ன ஆச்சு
கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இளைச்சிட்டாருன்னு கண்ணீர் விட்டு இந்த ரசிகர் கதறுகிறார்.
டெடிகேஷன்
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு, வெறும் டூயட் பாடும் ஹீரோயினாக அல்லாமல், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ், பாலிவுட் படமான மைதான் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அந்த படத்திற்காக இப்படியொரு டெடிகேஷனை செய்துள்ளார் என்பதை இந்த ரசிகர் டெடிகேஷன் என கமென்ட் போட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்லிம்மா அழகா இருக்காரு
கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படத்தில் ஸ்லிம்மா அழகாத் தான்யா இருக்காரு.. அவருடைய பாலிவுட் அறிமுகப் படத்திற்காக வெயிட் பண்றோம் என இந்த ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.
தீபிகா படுகோனா?
கீர்த்தி சுரேஷ் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டு போன இந்த ரசிகர், தீபிகா படுகோனாக மாறிவிட்டாரா என ஆச்சர்யத்துடன் கேட்டுள்ளார்.
பப்ளி தான் நல்லா இருந்துச்சு
கீர்த்தி சுரேஷ் பப்ளியாக இருந்தது தான் நல்லா இருந்துச்சு என இந்த ரசிகர் ஏக்கத்தோடு ட்வீட் போட்டுள்ளார்.

கவுண்டமணி காமெடி
ஆத்தா நீ உன்ற காட்ல சிரிச்சிக்க ஆத்தா என சின்னகவுண்டர் படத்தில் வரும் கவுண்டமணி காமெடியை போட்டு கீர்த்தி சுரேஷின் இந்த புதிய லுக்கை கலாய்த்துள்ளார்.

பெண்குயின்
அஜய் தேவ்கனுடன் மைதான் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தமிழில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் பெண்குயின் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மிஸ் இந்தியா மற்றும் சில படங்களும் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ளன.


Click it and Unblock the Notifications











