ட்ரோல்களுக்கு தரமான பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்

சென்னை: அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள சாணிக் காயிதம் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இப்படியொரு ஸ்க்ரிப்டை தேர்வு செய்து செம போல்டாக நடித்த கீர்த்தி சுரேஷை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

#KeerthySuresh எனும் ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில், இந்த படம் ஒரு கம்பேக் என்று பலராலும் பாராட்டப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் கெட்ட வார்த்தைகளை பேசியும், கொடூரமாக கொலைகள் செய்தும் நடித்துள்ள ராவான நடிப்பு விமர்சிக்கப்பட்டாலும் ரசிகர்களால் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

தொடர் தோல்விகள்

தொடர் தோல்விகள்

தொடரி படத்தில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்ட கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் தேசிய விருதையே தட்டிச் சென்றார். அஜய் தேவ்கனின் மைதான் படத்தில் நடிப்பதற்காக ஓடாய் தேய்ந்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பெண்குயின், மிஸ் இந்தியா, ரங் தே, அண்ணாத்த, மரைக்காயர், குட் லக் சகி என தொடர்ந்து தொடர் தோல்விகளை சந்தித்ததால் மீண்டும் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வந்தார்.

ட்ரோல்களுக்கு பதிலடி

ட்ரோல்களுக்கு பதிலடி

சாணிக் காயிதம் திரைப்படமும் ஓடிடியில் வெளியாவதால் மீண்டும் அவரை ஓடிடி நாயகி என்றே நெட்டிசன்கள் ஓட்டி வந்தனர். ஆனால், முதுகில் அருவா சொருகிக் கொண்டு அந்த இடத்திலேயே ஆசிட் ஊற்றும் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு போய் கீர்த்தி சுரேஷை பாராடி வருகின்றனர். இங்கே நடிகர்கள் எல்லாமே சூப்பர் தான். ஆனால், நல்ல இயக்குநர்கள் கைகளுக்கு அவர்கள் செல்ல வேண்டும் என்பதை மீண்டும் சாணிக் காயிதம் நிரூபித்துள்ளது.

சந்தேகமே இல்லை

சந்தேகமே இல்லை

சந்தேகமே இல்லை கீர்த்தி சுரேஷின் அசுரத் தனமான நடிப்புக்கு சாணிக் காயிதம் படம் ஒரு மிகப்பெரிய சான்று என ரசிகர்கள், படத்தின் காட்சிகளையும் ஸ்டில்களையும் பதிவிட்டு கீர்த்தி சுரேஷை கொண்டாடி வருகின்றனர். இதுவரை இப்படியொரு வெறித்தனமான நடிப்பை எந்தவொரு நடிகையும் வெளிப்படுத்தியிருக்க மாட்டாங்க என்றும் பாராட்டி வருகின்றனர்.

ரெண்டுபேருமே மாஸ்

ரெண்டுபேருமே மாஸ்

பழிக்குப் பழி/ இரத்த வெறி.. ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு காயித காவியம்.. கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இவங்க ரெண்டு பேரோட ஆக்டிங் மரண மாஸ் என இந்த ரசிகர் பாராட்டித் தள்ளி உள்ளார். மேலும், ஐ லவ் யூ டார்லிங் கீர்த்தி சுரேஷ் என ஹார்ட்டின்களை பறக்க விட்டுள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

மீண்டும் ஒரு தேசிய விருது இந்த படத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வழங்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். சாதாரண பழி வாங்கும் கதையை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்சிப் படுத்திய விதத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்றும், செல்வராகவன் சங்கையனாக வாழ்ந்துள்ளார் என்னா நடிப்புடா சாமி என இருவருக்கும் சபாஷ் பறக்கிறது.

பொன்னி அக்கா பாவம்

பொன்னி அக்கா பாவம்

வயதானவர்கள், போலீஸ்காரர், சிறுவர்கள் என பலரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சியில் அடிவாங்கியபடி முகமெல்லாம் வீங்கிப் போன நிலையில், கீர்த்தி சுரேஷை பார்த்து ரசிகர்கள் மிரண்டே போயுள்ளனர். அந்த கண் தெரியாத சுடலையை போல ரசிகர்களும் பொன்னி அக்கா பாவம் தப்பு பண்றாங்க என ட்வீட்டுகள் தெறிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X