அப்பாவுக்கு என் மீது நம்பிக்கையே இல்லை.. எல்லாத்துக்கும் அவர்தான் காரணம்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

முன்னணி நடிகர்களுடன்: அதன்படி விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்தார். தமிழில் அவர் கமர்ஷியல் படங்கள் நடித்தாலும் தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்றார். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு வரவில்லை.
மீண்டும் தமிழில்: இப்படிப்பட்ட சூழலில் தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக ரகு தாத்தா படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் அட்லீயின் தயாரிப்பிலும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துவருகிறார். மேலும் ரகுதாத்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் ஹிந்தி தொடர்பான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடித்திருக்கிறார் அவர்.
கீர்த்தி சுரேஷ் பேட்டி: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் ஒன்பதாவது படிக்கும்போது எனது அக்கா 12ஆவது படித்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு அமெரிக்காவுக்கு படிக்க சென்றுவிட்டார் அவர். ஆனால் நான் அமெரிக்காவுக்கு போகக்கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தேன். ஏனெனில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.
டிமிக்கி கொடுத்தேன்: நான் அமெரிக்காவுக்கு சென்றால் நடிக்க முடியாது என்பதற்காக என் அப்பாவிடம் நான் டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆறு வருடங்கள் கழித்து எனது அக்கா இந்தியா வந்தார். அப்போது நான் நடிப்பதற்கு அவர்தான் எனக்கு நிறைய சப்போர்ட் செய்தார். நான் நடிக்க வருவது ஆரம்பத்தில் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்றால், என்னால் நடிக்க முடியுமா? எனக்கு நடிப்பு வருமா? என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.
நடிப்பு வரலைன்னா என்ன பண்ணுவா?: அவருக்கு இன்னொரு சந்தேகம் என்னவென்றால் நான் நடிக்க வந்த பிறகு அந்தப் படம் சரியாக இல்லையென்றால் நான் என்ன வேலை செய்வேன் என்று சராசரியாக ஒரு தந்தை எப்படி யோசிப்பாரோ அப்படித்தான் யோசித்தார். அதன் பிறகு அக்காதான் எனது தந்தையை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











