நல்ல பேரை வாங்கிருக்கேன்.. மானத்த வாங்கிடாத.. கீர்த்தி சுரேஷிடம் தந்தை அப்படி சொல்லும்படி என்னாச்சு?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தாய் மேனகா ஒரு நடிகை. தந்தை சுரேஷ் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு விஜய்,சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் நடித்தார்.

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் இடையில் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது. தெலுங்கில் அவர் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டடித்தன.
தேசிய விருது: அந்தவகையில் அவர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்
ரகுதாத்தா: தமிழில் அவர் கடைசியாக ரகுதாத்தா படத்தில் நடித்தார்.மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படத்தில் வைத்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்துவருகிறார். மேலும் ரிவால்வர் ரீட்டா என்ற படமும் அவரது நடிப்பில் உருவாகியிருக்கிறது. மாமன்னன் கொடுத்த ஹிட் வைபை ரகுதாத்தாவில் மிஸ் செய்த கீர்த்தி; இனி வரும் படங்களில் ஹிட் ரூட்டுக்கு திரும்புவதற்கு முழு முனைப்போடு உழைத்துவருகிறார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "அமெரிக்காவுக்கு என்னை அனுப்பி படிக்க வைப்பதுதான் எனது தந்தை, தாயின் ஆசை. ஆனால் எனக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தது. மேலும் ஹீரோயினாக வேண்டும் என்று விரும்பினேன். எனது ஆசையை அம்மாவிடம் சொன்னபோது, ""நீ சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் நேரத்தை ஒழுங்காக பின்பற்ற வேண்டும். இயக்குநர் முதல் யூனிட்பாய்வரை எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். எனது அப்பாவிடம் ஆசையை சொன்னபோது அவரோ, சினிமாவில் நான் நல்ல பெயரை வாங்கி வைத்திருக்கிறேன். நீ எனது மானத்தை மட்டும் வாங்கிடாத"" என்று கூறியதாக கீர்த்தி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











