எதுவுமே மாறவில்லை.. ஆண்டனிக்குதான் கொஞ்சம் புதுசு.. ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்
சென்னை: கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக காதலித்தார்கள். இவர்களின் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் இணைந்து தங்களது தல பொங்கலை கொண்டாடினார்கள். இதில் விஜய்யும் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம், தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த அவர் இப்போது ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்காக பேபி ஜான் திரைப்படம் வெளியானது. இதனை இயக்குநர் அட்லீ தயாரித்திருந்தார். வருண் தவான் ஹீரோவாக நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.

கீர்த்தியின் காதல்: இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் காதலில் விழுந்துவிட்டார் என்று கடந்த வருடத்தில் பரவலாக பேசப்பட்டது. அவருடன் சிலரை இணைத்து வைத்தும் கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் அத்தனைக்கும் அவர் பொறுமையாகவே இருந்தார். ஒருகட்டத்தில் கீர்த்தி சுரேஷின் தந்தை தனது மகள் ஒருவரை காதலித்துவருகிறார் என்று ஓபனாக பேசினார்.அதற்கு பிறகு கீர்த்தியோ தனது காதலரான ஆண்டனி தட்டிலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிமுகம் செய்துவைத்தார்.
திருமணம்: மேலும் தங்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடக்கும் என்றும் அறிவித்தார். அதன்படி கடந்த வருடம் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக திருமணம் நடந்தது. ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் நடந்த திருமணத்தில் விஜய், திரிஷா, அட்லீ, பிரியா, கல்யாணி பிரியதர்ஷன்,டிடி என நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. திருமணத்துக்கு பிறகு பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் மும்முரமாக கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ்.
தல பொங்கல்: திருமணத்துக்கு பின் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடிப்பார் என்று உறுதியாகியிருக்கிறது. அவருக்கு கணவர் ஆண்டனி தட்டிலும் முழு சப்போர்ட்டாக இருக்கிறார். சூழல் இப்படி இருக்க கீர்த்தி சுரேஷும், ஆண்டனி தட்டிலும் தங்களது தல பொங்கலை சில நாட்களுக்கு முன்பு கொண்டாடினார்கள். நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அந்தக் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸாக கலந்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது.
கீர்த்தியின் பேட்டி: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், " திருமணத்துக்கு பிறகு எனது வாழ்க்கையில் பெரிதான எந்த மாற்றமும் இல்லை என்பதுதான் உண்மை. இந்தத் திருமணத்தால் எங்கள் மீது பலரது கவனம் திரும்பியிருக்கிறது. எனக்கு அது பழகிவிட்டது. ஆனால் ஆண்டனிக்கு இது புதிதான ஒன்று. திருமணத்தால் என்ன வித்தியாசம் என்னவென்றால் இரண்டு குடும்பங்கள் ஒன்றாக இணைந்திருப்பதுதான். நாங்கள் நீண்ட காலம் ஒன்றாக இருக்கிறோம். அதனால் எங்களுக்குள்ளே பெரிய மாற்றமெல்லாம் இல்லை.
தல பொங்கல்: எங்கள் திருமணத்துக்கு பிறகு வரும் முதல் பொங்கல் இது. தல பொங்கல் வேறு. இந்த பொங்கலை எங்கள் வீட்டில் வைத்து இந்த பொங்கலை கொண்டாடினோம். பொங்கல் எல்லோருக்குமே சிறப்பான ஒன்றுதான். பெர்சனலாகவும் சரி, சினிமா கரியரை பொறுத்தவரையிலும் சரி கடந்த வருடம் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது""என்றார்.


Click it and Unblock the Notifications











