ஏன் இப்படி ஆகிட்ட.. இதெல்லாம் உன்கிட்ட யார் சொன்னது.. கீர்த்தி சுரேஷை கண்டித்த விஜய்யின் நண்பர்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியானது. ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தச் சூழலில் அவர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல தமிழ் இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினி உடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.
தேசிய விருது: இதற்கிடையே நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
ரகுதாத்தா: அவரது நடிப்பில் கடைசியாக ஆகஸ்ட் 15 அன்று ரகுதாத்தா படம் வெளியானது. இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் வெளியாகவிருக்கிறது. அதேபோல் ஹிந்தியில் பேபி ஜான் படம் வெளியாகிறது. பேபி ஜான் திரைப்படம் தெறி படத்தின் ரீமேக் என்பதும்; அதனை அட்லீ தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கீர்த்தியின் பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில், “விஜய்யின் நண்பர் சஞ்சீவ்வை நான் சார் என்றுதான் அழைப்பேன். அவரை பார்த்தால் மட்டும் ஏன் இப்படி பம்முற என்று அவரது மனைவி ப்ரீத்தி கேட்பார். ஒருமுறை நான் உடல் இளைத்துவிட்டேன். அப்போது என்னை சஞ்சீவ் சந்தித்தார். அந்த சமயத்தில் என்னிடம் ஏன் நீ இப்படி ஒல்லி ஆகிட்ட. இப்படி ஆக சொல்லி உன்னிடம் யார் சொன்னது என்று உரிமையோடு கேட்டார்” என்றார் கீர்த்தி சுரேஷ்.


Click it and Unblock the Notifications











