விஜய்யும், சூர்யாவும் ஒரு மாதிரி, ஆனால் விக்ரம் வேற மாதிரி: கீர்த்தி சுரேஷ்
Recommended Video

சென்னை: விஜய், சூர்யா, விக்ரம் பற்றி பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
விஜய்யுடன் விஜய் 62 படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தவிர சீயான் விக்ரமுடன் சேர்ந்து சாமி 2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறியதாவது,

ஹீரோயின்
விஜய் 62 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதாக கூறுகிறார்கள். இரண்டு பேர் எல்லாம் இல்லை. நான் மட்டும் தான் ஹீரோயின். மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

சூர்யா
விஜய், விக்ரம், சூர்யா ஆகிய மூன்று பேரும் வித்தியாசமானவர்கள். விஜய் சார் ரொம்வே அமைதி. ஆனால் அவரிடம் நான் என்ன வேண்டுமானாலும் கேட்க முடியும்.

விக்ரம்
சூர்யா அமைதியாக இருப்பார். யாருடனும்
அவ்வளவாக பேச மாட்டார். இருப்பினும் நாம் ஏதாவது கேட்டால் கருத்து சொல்வார். ஆனால் விக்ரம் சார் நன்றாக பேசுவார். துருதுருவென இருப்பார். செட்டில் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்.

ஹரி
சாமி 2 படத்தில் த்ரிஷா இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. என்னை விட த்ரிஷாவை மீண்டும் பார்க்கத் தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று இயக்குனரிடம் கூறினேன்.

வீடு
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பெற்றோருடன் வீட்டில் இருக்க விரும்புகிறேன். தூங்குவேன், டிவி பார்ப்பேன். வீட்டில் நேரம் செலவிட விரும்புகிறேன் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











