கொரோனாவில் இருந்து குணமான கீர்த்தி சுரேஷ்.. என்ன முகம் இப்படி டல் ஆகிடுச்சே என வருந்தும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
கடந்த ஜனவரி 11ம் தேதி கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபுவை தொடர்ந்து கீர்த்திக்கும்
டோலிவுட் நடிகர் மகேஷ் பாபுவுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இருவரும் இணைந்து சர்காரு வாரிப் பாட்டா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் சம்மருக்கு தள்ளிப் போய் உள்ளது.

தடுப்பூசி விளம்பரம்
நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷும் தமிழ்நாடு அரசின் கொரோனா விளம்பரத்தில் கடந்த ஆண்டு பங்கேற்று இருந்தனர். இரு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டு உரிய பாதுகாப்புடன் இருந்த நிலையிலும் தனக்கு கொரோனா தாக்கி உள்ளதாகவும் தடுப்பூசிகளை தவறாமல் அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கீர்த்தி சுரேஷ் கோரிக்கை வைத்திருந்தார்.

கொரோனா போயிடுச்சு
இந்நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டேன் என்றும் ரசிகர்களுக்கு பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துக்களை என தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை ஷேர் செய்து அறிவித்து ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளார். தென்னிந்தியா முழுவதும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாசிட்டிவான நெகட்டிவ்
நெகட்டிவ் என்பதற்கான அர்த்தமே சமீப காலமாக பாசிட்டிவ் ஆக மாறி வருகிறது என கொரோனா நெகட்டிவ் என சமீபத்தில் எடுத்த டெஸ்ட்டில் வந்த சந்தோஷத்தை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் கடைசியாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கரில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

Recommended Video

முகம் டல் ஆகிடுச்சே
கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு வாரமாக அவதிப்பட்டு வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவில் இருந்து குணமாகி விட்டேன் என சில லேட்டஸ்ட் புகைப்படங்களை (மேக்கப் எதுவும் இல்லாத) ஷேர் செய்த நிலையில், ரசிகர்கள் ரொம்பவே முகம் டல் ஆகிடுச்சே ரொம்ப கவனமாக இருங்க கீர்த்தி, உங்க உடல் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என ரசிகர்கள் அக்கறையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Click it and Unblock the Notifications