அட கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு திருமணங்களா?.. எப்போ, எங்கே, எப்படி தெரியுமா?
சென்னை: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் ரகுதாத்தா, சைரன், மாமன்னன் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் மாமன்னன் படம் மட்டும்தான் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதேசமயம் ரகுதாத்தா படம் கதை ரீதியாக நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதால் படம் சரியான வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா, பேபி ஜான் படங்கள் வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இன்னும் சில நாட்களில் அவருக்கு திருமணமும் நடக்கவிருக்கிறது.
மலையாள திரையுலகில் அறிமுகமாகி பிறகு தமிழில் ஹீரோயினாக வந்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் அவருக்கு ஆரம்பத்தில் சில படங்கள் கைகொடுக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு பாடலில் கீர்த்தி சுரேஷின் எக்ஸ்பிரெஷன் எல்லாம் நன்றாக இருந்ததை அடுத்து ரசிகர்களின் கண்கள் கீர்த்தி சுரேஷை கவனிக்க ஆரம்பித்தன.

தொடர் வாய்ப்புகள்: அதனையடுத்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வரிசையாக வர ஆரம்பித்தன. அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினியுடன் அண்ணாத்த என வரிசையாக படங்களில் நடித்தார். அவர் வரிசையாக நடித்து நல்ல நடிகை என்ற பெயரை எடுத்தாலும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்தார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான அந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.
தமிழில் ரீ எண்ட்ரி: இதற்கிடையே தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் அவருக்கு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. அதில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் கிடைக்காவிட்டாலும் கிடைத்ததில் தனது நடிப்பை தரமாக வெளிப்படுத்தினார். தொடர்ந்து சைரன் படத்தில் நடித்த அவருக்கு மீண்டும் தோல்வியே கிடைத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா வெளியானது. மேலும் ரிவால்வர் ரீட்டா, பேபி ஜான் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
பேபி ஜான் படத்திலிருந்து முதல் சிங்கிள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் பாடலில் கீர்த்தி சுரேஷ் உச்சக்கட்ட கிளாமரை காண்பித்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துதான் போனார்கள். நிச்சயம் அவர் ஹிந்தியில் தொடர்ந்து நடிப்பார் என்று கணிக்கப்பட்ட சூழலில்; யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. தனது பள்ளி கால தோழரான ஆண்டனி தட்டில் என்பவரைத்தான் அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
ஆண்டனி தட்டிலும், கீர்த்தியும் கிட்டத்தட்ட 15 வருடங்கள் காதலித்துவந்திருக்கிறார்கள். ஆண்டனி கொச்சி, சென்னை, துபாய் உள்ளிட்ட இடங்களில் பெரிய தொழிலதிபராக வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரது திருமணம் கோவாவில் டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடக்கும் என்று கீர்த்தி சுரேஷே திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு கூறினார். இதனால் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு கீர்த்தி நடிப்பார் என்றே கூறப்படுகிறது.
புதிய தகவல்: இதற்கிடையே இந்தத் திருமணத்துக்காக கீர்த்தி சுரேஷ் மதம் மாறப்போவதாகவும்; இருவரது திருமணமும் கிறிஸ்தவ முறைப்படி நடக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் திருமணம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கீர்த்தி மதம் எல்லாம் மாறவில்லை என்றும்; டிசம்பர் 12ஆம் தேதி காலை ஹிந்து முறைப்படி முதலில் திருமணம் நடக்கும் என்றும்; அன்றைய தின மாலையில் தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











