வாவ்.. கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியாச்சாம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருதை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Keerthy Suresh Reveals her quarantine Partner | Lock Down

மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் படம் தமிழில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தையும் கொடுத்தது.

சிவகார்த்திகேயனுடன்

சிவகார்த்திகேயனுடன்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், ரெமோ, சீமராஜா என அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். ரஜினி முருகன் படத்தில் வரும் "உன் மேல ஒரு கண்ணு" பாடல் பட்டித் தொட்டியெங்கும் கீர்த்தி சுரேஷை பிரபலப்படுத்தியது.

தளபதி விஜய்

தளபதி விஜய்

சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமுடன் சாமி 2 படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தளபதி விஜய்யுடன் பைரவா, சர்கார் என இரு படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தது.

உமன் சென்ட்ரிக்

உமன் சென்ட்ரிக்

லூசு ஹீரோயின் என்ற இமேஜை உடைக்க நினைத்த கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்தில் லீடு ரோலில் நடித்து தனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார். அந்த படத்தைத் தொடர்ந்து, தமிழில் பெண்குயின், தெலுங்கில் மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

தொடர்ந்து, விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்து வந்தார். நாக் அஷ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது

திருமணம்

80களில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்த நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷுக்கு, விரைவில் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், பெற்றோர்களின் முடிவுக்கு ஓகே சொல்லி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

மாப்பிள்ளை யார்?

மாப்பிள்ளை யார்?

கேரளாவின் பிரபல தொழிலதிபரும், அரசியல் செல்வாக்கும் கொண்ட மல்டி மில்லியனர் ஒருவரைத் தான் கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளையாக அவரது பெற்றோர்கள் சுரேஷ் குமார் மற்றும் மேனகா பார்த்துள்ளார்களாம். மாப்பிள்ளை குறித்தும், திருமணம் குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெறும் என்றும் தெரிகிறது.

அண்ணாத்த

அண்ணாத்த

கொரோனா பாதிப்பு காரணமாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள மிஸ் இந்தியா, பெண்குயின் படங்களில் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X