திருமணத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் எடுத்திருக்கும் முடிவு இதுவா?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்

சென்னை: கீர்த்தி சுரேஷ் கடந்த 12ஆம் தேதி ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரது திருமணமும் கோவாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் விஜய், திரிஷா, டிடி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சூழல் இப்படி இருக்க திருமணத்துக்கு பிறகு கீர்த்தி நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்த சூழலில்; அதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். விஜய், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் நடித்த அவர் தமிழில் கடைசியாக ரகுதாத்தா படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அந்தப் படம் வெளியானது. இரண்டு மொழிகளிலுமே படத்துக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கும், படத்தின் மேக்கிங்கிற்கும், கதைக்கும் நல்ல ரெஸ்பான்ஸ்தான் கிடைத்தது.

keerthy suresh antony thattil

ஹிந்தியில் கீர்த்தி: இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்தவகையில் தமிழில் மெகா ஹிட்டான தெறி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. அட்லீ தயாரித்திருக்கும் அந்தப் படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் படத்திலிருந்து ஒரு சிங்கிள் வெளியானது. அந்த சிங்கிளை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். அதற்கு காரணம் கீர்த்தியின் கிளாமர். தமிழில் கிளாமர் ரோல் செய்யாத அவர் ஹிந்தியில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறார்.

திருமணம்: ஹிந்தியிலும் அவர் எண்ட்ரி கொடுத்திருப்பதால் நிச்சயம் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி ஆண்டனி தட்டில் என்பவரை காதலிப்பதாக அவர் அறிவித்தார். மேலும் கோவாவில் திருமணம் நடக்கும் என்றும் அறிவித்து; அதன்படி கடந்த 12ஆம் தேதி திருமணமும் செய்துகொண்டார். இதில் விஜய், திரிஷா, கல்யாணி பிரியதர்ஷன், அட்லீயின் மனைவி பிரியா, விஜய்யின் மேனேஜர் ஜெகதீசன் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

இரண்டு முறை திருமணம்: இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் முதலில் இவர்களது திருமணம் ஹிந்து முறைப்படி நடந்தது. அதனையடுத்து ஆண்டனி ஹிந்துவாக மதம் மாறிவிட்டாரோ என்றும் குரல்கள் எழுந்தன. ஆனால் அதிலும் உண்மையில்லை. இரண்டு பேருக்கும் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது. அப்போது கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் லிப் லாக் செய்துகொண்ட புகைப்படங்களும் வெளியாகி பெரும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

வெளியான தகவல்: இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ் நடிப்பை தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது. தற்போது அதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி திருமணத்துக்கு பிறகு நடிப்பை தொடர்வதில் கீர்த்திக்கு விருப்பம் இல்லை என்றும்; பட தயாரிப்புகள், கணவர் ஆண்டனியின் தொழில்களை கவனித்துக்கொள்ளும் முடிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X