விஜய்க்கு மட்டுமே இந்த ஸ்பெஷல்.. கீர்த்தி சுரேஷ் முதல் திரிஷா வரை.. இத்தனை ஹீரோயின்கள் வாழ்த்து!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே இப்படி ஏகப்பட்ட டாப் ஹீரோயின்கள் அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்தளவுக்கு ஹீரோயின்களுடன் நல்ல நட்புறவை தளபதி விஜய் கொண்டிருப்பதை தான் இது காட்டுகிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

தளபதி விஜய்யின் 50வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று முழுவதும் ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். நடிகைகள் முன்பு போல விஜய்க்கு வாழ்த்து சொல்லவே இல்லையே என்கிற கேள்வி எழுந்த நிலையில், நேற்று மாலை முதல் வரிசையாக பல முன்னணி நடிகைகள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

vijay trisha keerthy suresh vijay birthday varalakshmi sarathkumar sneha

நடிகை திரிஷா நேற்று முழுவதும் வாழ்த்து தெரிவிக்காமல் இன்று வாழ்த்து தெரிவித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜய்க்கு ஒட்டுமொத்தமாக எந்த எந்த ஹீரோயின்கள் எல்லாம் வாழ்த்து சொன்னாங்க என்பதை ஒரு குட்டி ரவுண்டப்பாக இங்கே பார்க்கலாம்.

அட்லீ முதல் லோகேஷ் வரை: தளபதியின் தம்பிகளான அட்லீ, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் விஜய் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து தெரிவித்து விட்டனர். மேலும், வெங்கட் பிரபு, ஏ.எல். விஜய் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கமல்ஹாசன், சாந்தனு, கவின் உள்ளிட்ட ஹீரோக்களும் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கீர்த்தி சுரேஷ் வாழ்த்து: நடிகைகள் என்று பார்த்தால் கீர்த்தி சுரேஷ் சற்று தாமதமாக நேற்று மாலை விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பல நடிகைகள் சூட்டிங்கில் பிசியாக இருப்பதால் ஷூட்டிங் முடிந்து மாலை நேரத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

vijay trisha keerthy suresh vijay birthday varalakshmi sarathkumar sneha

வரலட்சுமி சரத்குமார்: நடிகை வரலட்சுமி சரத்குமார் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட பிரத்யேக போட்டோக்களை ஷேர் செய்து நேற்று காலையிலேயே பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். ஜூலை மாதம் அவருக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், விஜய் திருமணத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay trisha keerthy suresh vijay birthday varalakshmi sarathkumar sneha

சினேகா, லைலா, மீனாக்‌ஷி: கோட் படத்தின் நடிகைகளான சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி மற்றும் லைலா உள்ளிட்ட நடிகைகள் வீடியோ மூலமாக விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கோட் படத்தில் சினேகா மற்றும் மீனாக்‌ஷி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாகவும் லைலா பிரசாந்துக்கு ஜோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திரிஷா எக்ஸ்க்ளூசிவ்: நடிகை திரிஷா இன்று விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று முழுவதும் அவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்தன. இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய்யுடன் லிப்டில் எடுத்த எக்ஸ்க்ளூசிவ் போட்டோ ஒன்றை வெளியிட்டு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். போக்கிரி படத்தில் வில்லியாக நடித்த பிருந்தா பரேக் உள்பட மேலும், பல நடிகைகள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

vijay trisha keerthy suresh vijay birthday varalakshmi sarathkumar sneha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X