வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. அட இங்கேயும் விஜய்யா?.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய படமாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு எதிரான அத்தனை திணிப்புகளையும் பற்றி இந்த படம் பேசுகிறது என நைஸாக அந்த சர்ச்சையில் இருந்து கழண்டுக் கொள்ளும் விதமாகவே தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பேசி வருகிறார்.
நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றிய கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆனால், அவர் அங்கேயும் விஜய் பேசிய வசனத்தையே மேற்கோள் காட்டி பேசியிருப்பதை நெட்டிசன்கள் மீண்டும் சோஷியல் மீடியாவில் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
நடித்ததில் குடும்பத்திற்கு பிடித்த படம்: மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம், ரஜினிமுருகன், ரெமோ, சீமராஜா, தொடரி, சண்டக்கோழி 2, சர்கார், பைரவா, சாணிக் காயிதம், மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் டாப் ஹீரோயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடித்ததிலேயே அவரது குடும்பத்தினருக்கு ரொம்பவே பிடித்த படம் என்றால் அது நடிகையர் திலகம் படம் தான் எனக் கூறியுள்ளார்.

எப்படி நடிக்க வந்தேன் தெரியுமா?: பிரியதர்ஷன் அங்கிள் ஒரு நாள் அப்பாவிடம் ஜாலியாக கிளப் ஒன்றில் நைட் டின்னரின் போது பேசிக் கொண்டிருந்தார். அடுத்த படத்துக்கு மனசுல ஒரு பெண்ணை நினைத்திருக்கிறேன். ஆனால், அவ அப்பன் ரொம்ப முரண்டு பிடிப்பவர் என்றார். யாருன்னு சொல்லு, நான் பேசுறேன்னு சொல்லி எங்கப்பா நல்லா லாக் ஆகிட்டாரு, உன்னோட பொண்ணுதான் நீயே பேசி ஓகே பண்ணிடுன்னு பிரியதர்ஷன் அங்கிள் சொல்லிட்டாரு, அப்படித்தான் சினிமாவில் ஹீரோயினாக மாறினேன் என்றார்.
வதந்திக்கு விஜய் ஸ்டைலில் பதில்: பாராட்டுக்களை எப்படி சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல விமர்சனங்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். ஆனால், விமர்சனங்களை கடந்து பர்சனல் மேட்டர்களில் தலையிட்டு, குடும்பத்தினர் பற்றியும் நடக்காத விஷயங்களை நடந்தது போல கதை கட்டி காசிப் பேசுபவர்கள் பற்றி என் ரெண்டு காதுக்குள் போட்டுக் கொள்ளவே மாட்டேன் என்றார். மேலும், தளபதி விஜய் சொன்னது போல, உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகி விடும்னு சொன்ன வீடியோவை பார்த்தேன். அதுதான் இதற்கு சரியான பதில் என்றார் கீர்த்தி சுரேஷ்.
குவியும் கமெண்ட்ஸ்: அந்த வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் வதந்திக்கு விளக்கம் கொடுக்கவும் விஜய்யை எப்படி கோட் பண்றாரு பாருங்க கீர்த்தி சுரேஷ், இதையெல்லாம் நோட் பண்ணுங்க நோட் பண்ணுங்கப்பா என கலாய்த்து வருகின்றனர்.
பல முனை போட்டி: வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்துக்குப் போட்டியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா, பிரசாந்த் நடித்த அந்தகன், அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











