இதுக்குத்தானா...? மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.
சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியில் செல்வனில் இருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, மலையாள நடிகர் லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து காடுகளில் நடக்கிறது. இதன் ஷூட்டிங் தொடங்கிவிட்டது.
இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் சிவா இயக்கித்தில் ரஜினி நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கால்ஷீட் பிரச்னை காரணமாக, மணிரத்னத்தின் பொன்னியில் செல்வனில் இருந்து அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











