நைட் பார்ட்டி..ஆன்மீக பயணம்.. பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்...என்னாச்சு இவருக்கு!
சென்னை : ஒரு பக்கம் நைட் பார்ட்டி, மறுபக்கம் ஆன்மீக பயணம் சென்று வரும் கீர்த்தி சுரேஷுக்கு என்னாச்சு என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கில் மகாநடி என்றும் தமிழில் நடிகையர் திலகம் என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.
இவர் கடைசியாக மரக்காயர், அண்ணாத்த, சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்தார். அது மட்டும் இல்லாமல் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம், தெலுங்கில் 'மகாநடி' என்ற பெயரிலும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்று பெயரில் வெளியானது.

தேசிய விருது வாங்கினார்
நடிகையர் திலகம் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக தகவல் வெளியான போது, பலர் கீர்த்தி சுரேஷின் நடிப்பு குறித்து கடுமையாக விமர்சித்தார்கள். அவை அனைத்துக்கும் அமைதியாக இருந்த கீர்த்தி சுரேஷ், அந்த படத்தில் நடித்ததற்கு தேசிய விருதை வாங்கி, கேலி பேசியவர்களின் வாயை அடைத்தார்.

அடுத்தடுத்த படங்களில்
தமிழ், தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்தார். இதனால் இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்தது. ஆனால், கீர்த்தி சுரேஷிற்கு கடந்த சில காலங்களாக சாணி காயிதம், சர்காரு வாரி பாட்டா படங்கள் தோல்வியை சந்தித்தன. தற்போது இவர் தரசா, போலா சங்கர், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பூர்வீக வீட்டில்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் திருக்குறுங்குடி பகுதியில் உள்ள மூதாதையர்கள் வாழ்ந்த பூர்வீக வீட்டில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்த பழம்பெருமை வாய்ந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

நைட் பார்ட்டி
கடந்த வாரம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அதிதி பாலன், பிரக்யா மார்ட்டின் உள்ளிட்ட பல கேரள நடிகைகளுடன் கீர்த்தி சுரேஷ் கேர்ள்ஸ் நைட் பார்ட்டி கொண்டாடினார். இந்த இரண்டு புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் நைட் பார்ட்டி.. ஒரு பக்கம் ஆன்மீக பயணமா என கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் அனைத்துத் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











