திருமணத்துக்கு பின்பு முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் என்ன தெரியுமா?.. செம ஹேப்பியாம்

சென்னை: கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய், திரிஷா, அட்லீ, பிரியா, டிடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு தங்களது வாழ்க்கையை இரண்டு பேரும் உற்சாகத்தோடும், காதலோடும் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். கீர்த்தி தொடர்ந்து நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இது என்ன மாயம் படத்தில்தான் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக கோலிவுட்டில் கீர்த்தியின் மார்க்கெட் சரசரவென்று உயர்ந்தது. தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடிக்கையில் தனது திறமையையும் வளர்த்துக்கொண்டே சென்றதன் காரணமாக தெலுங்கு திரையுலக கதவும் அவருக்காக திறந்தது.

தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ்: அப்படி அவர் நடிகையர் திலகம் என்று அழைக்கப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அப்படத்தில் அவர் அப்படியே சாவித்திரியாகவே மாறிவிட்டார். அவரது நடிப்பை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போனார்கள். இதன் காரணமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. அந்த விருதினை பெற்றதன் மூலம் தேசிய அளவில் கவனிக்கப்படும் ஹீரோயினாக மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

சறுக்கல் டூ எழுச்சி: மகாநடி படத்துக்கு தேசிய விருது கிடைத்ததால் கண்டிப்பாக தனக்கு வரிசையாக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்திருந்தார் அவர். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் தமிழில் மாமன்னன் படத்தி நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கியிருந்த அந்தப் படத்தில் வடிவேலு அட்டகாசமாக நடித்து ஸ்கோர் செய்திருந்தாலும்;கீர்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாகவே தனது திறமையை காண்பித்தார். அதனையடுத்து சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார் அவர்.

பாலிவுட்டில் கீர்த்தி: தமிழ், தெலுங்கில் மட்டும் கலக்கி வந்த கீர்த்தி பேபி ஜான் படத்தில் நடித்து ஹிந்தியில் அறிமுகமானார். தமிழில் மெகா ஹிட்டடித்த தெறி படத்தின் ரீமேக்தான் அந்தப் படம். அட்லீதான் படத்தை தயாரித்திருந்தார். வருண் தவான் ஹீரோ கேரக்டரில் நடித்திருந்தார். நிச்சயம் இப்படம் ஹிட்டாகி பாலிவுட்டில் தனக்கான மார்க்கெட்டை உயர்த்தும் என்று நம்பிக்கொண்டிருந்த கீர்த்திக்கு ஏமாற்றமே கிடைத்தது. படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் படத்தின் ஒரு பாடலில் ஓவர் கிளாமரையும் காண்பித்திருந்தார் அவர்.

Keerthy Suresh Went to Srilanka Photos Goes Trending

திருமணம்: இதற்கிடையே அவர் ஆண்டனி தட்டில் என்பவரை பத்து வருடங்களுக்கும் மேலாக காதலித்துவந்திருக்கிறார். இத்தனை வருடங்கள் தன்னுடைய ரிலேஷன் ஷிப்பை ரகசியமாக வைத்திருந்த அவர் கடந்த வருடம்தான் வெளியே சொன்னார். வீட்டு சம்மதத்துடன் ஹிந்து, கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடந்து நடிக்கும் முடிவில் இருப்பதாகவே தெரிகிறது.

முதன்முறையாக: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதன்படி கையில் பாஸ்போர்ட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இலங்கைக்கு சென்றிருப்பதாகவும்; இதுதான் முதன்முறையாக இலங்கைக்கு செல்வது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X