அட இது செமயா இருக்கே.. குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?.. நடந்தா ஃபர்ஸ்ட் டைம்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி படத்தை இயக்கிவருகிறார். இதுவரை மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே இந்தப் படமும் கண்டிபாக நல்ல வரவேற்பு பெறும் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

Keerthy Suresh Good Bad Ugly Ajith


ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஓவர்: அஜர்பைஜானில் ஷூட்டிங்கில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை வந்த படக்குழு குட்டி ரெஸ்ட்டில் இருந்தபோது அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தற்போது பைக் டூர் கிளம்பியிருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர்.

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி: இதற்கிடையே விடாமுயற்சி ஷூட்டிங்கே முடியாத சூழலில் அஜித்தின் 63ஆவது படம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவின. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்குவார் என்றும்; நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது.

குட் பேட் அக்லி: படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியது. அதை பார்த்த ரசிகர்கள் மூன்று அஜித் இருந்ததால் இதில் ஏகே மூன்று வேடங்களில் நடிக்கிறாரா இல்லை மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறாரா என்று கேள்வி கேட்க தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க ஹைதராபாத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாகவும் தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா: இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இதில் கீர்த்தி சுரேஷ் நடித்தால் முதன்முறையாக அஜித்துடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இருவர்: இதற்கிடையே படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஹைதராபாத்தில் தொடங்கிய ஷூட்டிங்கில் நயன் கலந்துகொண்டு நடித்தார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே இதில் தெலுங்கு ஹீரோயின் ஸ்ரீலீலா நடிக்கிறார் என்றும் ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X