தோள் மீது சாய்ந்துகிட்டு.. வைரலாகும் கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போஸ்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தோள் மீது சாய்ந்துக் கொண்டு கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.
தேசிய விருது வென்ற நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஷ்வினின் பிறந்த நாள் நேற்று ஏப்ரல் 23ம் தேதி கொண்டாடப்பட்டது.
நேற்று இரவு தனது இன்ஸ்டா பக்கத்தில் நாக் அஷ்வினுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாக் அஷ்வின் பிறந்தநாள்
மறைந்த பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் மகாநடி எனும் பெயரில் இயக்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இளம் இயக்குநர் நாக் அஷ்வினின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. தெலுங்கு திரையுலகினர் நாக் அஷ்வினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகையர் திலகம்
நாக் அஷ்வின் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளிவந்த படம் மகாநடி. தமிழில் நடிகையர் திலகம் என டப் செய்யப்பட்டது. நடிகை சாவித்ரி ரோலில் கீர்த்தி சுரேஷ் அசத்தலாக நடித்திருந்தார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்திருந்தார். மேலும், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவும் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

கீர்த்தி சுரேஷ் வாழ்த்து
தேசிய விருது வென்ற போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து நாக் அஷ்வின் பிறந்த நாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தன் வாழ்வில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய நண்பர் என்றும், மறக்க முடியாத உயரங்களையும், அனுபவங்களையும் கொடுத்த உங்களோடு பணிபுரிந்த நாட்கள் மிகவும் அருமையானது என பதிவிட்டுள்ளார்.

சமந்தா வாழ்த்து
நடிகையர் திலகம் படத்தில் பத்திரிகையாளராக நடித்த நடிகை சமந்தாவும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் நாக் அஷ்வினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு பிறகு மீண்டும் சமூக வலைதள பக்கத்தில் தலை காட்டியுள்ள நடிகை சமந்தா, நாக் அஷ்வின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

பிரபாஸ் படம்
நடிகையர் திலகம் படத்தைத் தொடர்ந்து ஜதி ரத்னலு படத்தை தயாரித்துள்ளார் நாக் அஷ்வின். அடுத்ததாக பிரபாஸின் 21வது படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில், பிரபாஸ் படத்தை நாக் அஷ்வின் இயக்கப் போவதாக வெளியான அறிவிப்புகள் வைரலானது குறிப்பிடத்தக்கது. ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் 20வது படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அந்த படத்தை முடித்த கையோடு நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகப் போகும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











