அதுக்குள்ள அந்த படத்தோட ஹைதராபாத் ஷூட்டிங்கை முடித்த கீர்த்தி சுரேஷ்.. இனிமே இதுல தான் கவனமாம்!

Recommended Video

Priyamani Replaced Keerthy Suresh Debut in Hindi

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அஜய் தேவ்கனின் பாலிவுட் படமான மைதான் படத்தில் இருந்து வெளியேறிய கீர்த்தி சுரேஷ், நரேந்திரநாத் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் ஷூட்டிங்கை முடித்துள்ளாராம்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 168 படத்திலும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெண்குயின்

பெண்குயின்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் பெண்குயின் திரைப்படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. பெண்குயின் படமும் தெலுங்கில் வெளியாகிறது.

பாலிவுட் படம்

பாலிவுட் படம்

அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகி வந்த பாலிவுட் ஸ்போர்ட்ஸ் படமான மைதான் படத்தில் நடிக்க ஒப்பந்தமான கீர்த்தி சுரேஷ், அந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிகளவில் குறைத்து ஒல்லி நடிகையாக மாறினார். ஆனால், சமீபத்தில் அந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பிரியாமணி நடித்து வருகிறார்.

மிஸ் இந்தியா

மிஸ் இந்தியா

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன் தயாரிப்பில் நரேந்திரநாத் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் மிஸ் இந்தியா. தெலுங்கில் மகாநடி என்றும் தமிழில் நடிகையர் திலகம் என்ற தலைப்பில் வெளியாகி தேசிய விருதை அள்ளியது போல கீர்த்தி சுரேஷின் இந்த படமும் பல விருதுகளை குவிக்கும் என கருதப்படுகிறது.

ஷூட் ஓவர்

ஷூட் ஓவர்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிஸ் இந்தியா என்ற டைட்டிலில் உருவாகி வரும் படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் ஷூட்டிங்கை கீர்த்தி சுரேஷ் முடித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஷூட்டிங் காட்சிகளுடன் உருவான மிஸ் இந்தியா டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

தலைவர் 168

தலைவர் 168

ஹைதராபாத்தில் மிஸ் இந்தியா படத்திற்கான ஷூட்டிங் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 168 படத்திற்கான ஷூட்டிங் என செம்ம பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சிறுத்தை சிவா இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

யார் ஜோடி

யார் ஜோடி

ரஜினிக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடி இல்லை என்ற தகவல் பரவியதும் கீர்த்தி சுரேஷுக்கு யார் ஜோடி என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் ரகுல் ப்ரீத் சிங்குக்கு ஜோடியாக நடித்து வரும் சித்தார்த், தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிப்பார் என்ற தகவலும் வைரலாக பரவியது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என தங்களது கோரிக்கையையும் முன் வைத்து வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X