காலைல 4 மணிக்கே ஷூட்டிங்... கீர்த்தி சுரேஷின் கொல்கத்தா ஷெட்யூல் ஓவர்
சென்னை: தான் நடித்துவரும் மைதான் என்ற இந்தி படத்தின் கொல்கத்தா ஷூட்டிங்கை முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில், இது என்ன மாயம் படம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். இப்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

பிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இந்தியில் சினிமாவாகிறது. இதில் அஜய் தேவகன், ரஹீமாக நடிக்கிறார். அவர் மனைவியாக, நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அமித் சர்மா இயக்குகிறார். இவர், ஆயுஷ்மன் குர்ரானா நடித்த பதாய் ஹோ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை பேசும் சினிமா. இது, எந்த குறிப்பிட்ட மொழி மற்றும் பகுதியைச் சேர்ந்த படம் இல்லை. ஆனால், உலகம் அறிந்து கொள்ள வேண்டிய படம். சவலான கேரக்டர்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் 3வது ஷெட்யூல் கொல்கத்தா மற்றும் அதன் புறநகர் பகுதியில் நடந்து வந்தது. அஜய் தேவ்கன், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் பங்கேற்ற இதன் ஷூட்டிங் நேற்றோடு முடிந்துவிட்டது.
மற்ற பட ஷூட்டிங் போல் அல்லாமல், தினமும் அதிகாலை 4 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிவரை படப்பிடிப்பு நடக்கும். நடிகர், நடிகைகள் இதற்கு ஒத்துழைப்பு அளித்தனர் என்கிறது டீம்!


Click it and Unblock the Notifications











