யோகாவில் கலக்குறாரே கீர்த்தி சுரேஷ்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியானது. ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தச் சூழலில் கீர்த்தி சுரேஷ் தான் யோகா செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல தமிழ் இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினி உடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.

keerthy suresh raghuthatha

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.

தேசிய விருது: இதற்கிடையே நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

ரகுதாத்தா: அவரது நடிப்பில் கடைசியாக கடந்த ஆகஸ்ட் 15 அன்று ரகுதாத்தா படம் வெளியானது. இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் வெளியாகவிருக்கிறது. அதேபோல் ஹிந்தியில் பேபி ஜான் படம் வெளியாகிறது. பேபி ஜான் திரைப்படம் தெறி படத்தின் ரீமேக் என்பதும்; அதனை அட்லீ தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ்: இப்படி சினிமாவில் படு பிஸியாக இருந்தாலும் தனது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் இப்போதும் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் அட்டகாசமாக யோகா செய்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம கீர்த்தி செமயா யோகா செய்றாங்களே என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X