கீர்த்தி சுரேஷ், மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்ரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கம்பேக் கொடுப்பாரா?
சென்னை: சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் தேசிய விருதையே பெற்றுத் தந்தது. ஆனால், அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் நடித்த பல படங்கள் அவருக்கு பெரிதாக வெற்றியை தரவில்லை. ஹீரோயின் சென்ட்ரிக் படங்களையே கோலிவுட்டில் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி போட்டு நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் மிஷ்கின் உடன் இணைந்து நடித்துள்ள சத்யவான் சாவித்ரி திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்கிற அறிவிப்பை சற்றுமுன் அவர் அறிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், இந்த படமாவது அவருக்கு கம்பேக் கொடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கோர்ட் ரூம் டிராமா: சமீபத்தில் வெளியான சூர்யாவின் கருப்பு திரைப்படமே கிட்டத்தட்ட கோர்ட் ரூம் டிராமா தான். ஜோதிகா நடித்து ஓடிடியில் வெளியான சிஸ்டம் திரைப்படமும் கோர்ட் ரூம் டிராமா தான். இதுபோன்ற படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு மவுசு உள்ளது. படம் சரியான கியரை போட்டு டாப் நாட்ச்சை தொட்டு விட்டால் வெற்றி என்பது உறுதியாகி விடும். கீர்த்தி சுரேஷ் கோர்ட் ரூம் டிராமா படத்தை தேர்வு செய்துள்ள நிலையில், அவருக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிஷ்கின் இருக்காரு: லியோ, டிராகன் என சமீப காலமாக மிஷ்கின் நடித்து வரும் படங்களும் ஹிட் அடித்து வருகின்றன. செல்வராகவன் நடித்து வரும் படங்கள் பெரிதாக வெற்றியை கொடுக்காத நிலையில், மிஷ்கின் லக்கி சார்மாகவே படங்களுக்கு மாறி வருகிறார் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இருவரும் கோர்ட்டில் வாதாடும் காட்சிகள் அனல் பறந்தால் ரசிகர்களுக்கு அது செம ட்ரீட் தான்.
சத்யவான் சாவித்ரி ரிலீஸ் தேதி: பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள சத்யவான் சாவித்ரி படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஜூலை 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது. விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் சிக்மா திரைப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications