என்னை மன்னித்துவிடுங்கள்..ரவி மோகன் விஷயத்தில் கெனிஷா இப்படி சொல்லிட்டாங்களே ப்பா

சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ரவி மோகன் வந்ததுதான் சமூக வலைதளங்கள், திரைத்துறையில் பேசுப்பொருளாக மாறியது. விவாகரத்து வாங்குவதற்கு முன்னரே அவர் எப்படி வரலாம் என்று ஒருதரப்பினரும், விவாகரத்து முடிவில் ரவி உறுதியாக இருக்கும்போது தனக்கு பிடித்த இன்னொரு பெண்ணுடன் வருவதில் என்ன தவறு என்று மறுதரப்பினரும் தொடர்ந்து கூறினார்கள். இந்நிலையில் கெனிஷா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரவி மோகன் அவரை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். தான் ஏன் இந்த முடிவு எடுத்தேன் என்பது குறித்து அந்த சமயத்தில் அளித்த பேட்டிகளில் பேசியிருந்த ரவி, 'வீட்டில் வேலைக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதைகூட தனக்கு கிடைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறியபோது தன்னிடம் கார்கூட இல்லை' என்று காரணங்களை அடுக்கினார். எனவே இதற்கெல்லாம் ஆர்த்தியும் அவரது தாய் சுஜாதாவும்தான் காரணம் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

ஆர்த்தியின் விளக்கம்: ஆனால் ஆர்த்தி அளித்த விளக்கத்திலோ, 'தன்னிடம் எதுவும் கேட்கப்படாமலேயே இந்த முடிவை ரவி எடுத்திருக்கிறார். எனக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ முறை முயன்றேன். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டுமென்று கூறி நீதிமன்றத்துக்கு சென்றார் ரவி மோகன். இப்போது அவர்களது விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது.

கெனிஷாவுடன் ஜோடி: இதற்கிடையே கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி பேசியதற்கு காட்டமான ரியாக்‌ஷனும் கொடுத்திருந்தார் ரவி. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வந்தார். திருமணம், ரிசப்ஷன் என இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாக வந்தார்கள். அதேபோல் மாலத்தீவுக்கும் அவர்கள் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆர்த்தியோ எமோஷனலாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

Kenishaa Latest Interview about Ravi Mohan Controversy

நடிகைகள் ஆதரவு: அந்த அறிக்கையில், 'குழந்தைகளுக்காக ஒரு தாயாக மட்டுமே இப்போது குரல் எழுப்புகிறேன். நீதிமன்றம் முடிவு செய்யும்வரை நான் ஆர்த்தி ரவிதான். எனவே யாரும் என்னை இப்போதைக்கு ரவியின் முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம்' என தெரிவித்திருந்தார். அவரது அந்த அறிக்கையை பார்த்த நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் ஆர்த்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு பெருக ஆரம்பித்திருக்கிறது. அதேசமயம் கெனிஷாவோ தான் சோல் மேட்டை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவருகிறார்.

கெனிஷாவின் பேட்டி: ரவி மோகனும் கெனிஷா தனது வாழ்க்கையில் வந்த ஒரு ஒளி என்றும் குறிப்பிட்டிருந்தார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு கெனிஷாவு, ரவியும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வெளியானது. அதனைப் பார்த்த பலரும் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்ததாக கூறினார்கள். ஆனால் அவர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்கள் என்பது பின்னர்தான் தெரியவந்தது. இந்நிலையில் கெனிஷா கொடுத்திருக்கும் பேட்டியில் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

என்ன பேசினார்: அந்தப் பேட்டியில் அவர், "ஐசரி கணேஷை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். அன்றைய தினத்தில் ஒரே நிறத்தில் நண்பர்கள் உடை அணிந்திருக்கக்கூடாதா?. அதேபோல் நான் ரவியுடன் பிளான் போட்டு அன்று ஒன்றாக வரவில்லை. அனைத்தையும் மேலே இருப்பவன் பிளான் போட்டிருக்கிறான். அதுபடிதான் நடந்தது" என்றார்.இந்தப் பேட்டி ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X