''கேரளாவுக்கு கடவுள் தந்த பரிசு''... மஞ்சுவாரியரைப் புகழ்ந்த கேரள சபாநாயகர்
திருவனந்தபுரம்: 'கேரளாவுக்கு கடவுள் தந்த பரிசு' என மஞ்சு வாரியரை தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் புகழ்ந்து பேசியுள்ளார் கேரள சபாநாயகர் கார்த்திக்கேயன்.
முன்னணி மலையாள நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் நடிகர் திலீப்புடன் நடந்த காதல் திருமணத்தையடுத்து சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது திலீப்புக்கும், மஞ்சு வாரியருக்கும் இடையில் உண்டான கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் மூலம் நடிக்க வந்துள்ளார் மஞ்சு வாரியர். இந்நிலையில் திருவனந்தபுரம் அருகே விதுராவில் நடந்த ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கேரள சட்டசபை சபாநாயகர் கார்த்தி கேயனும் கலந்து கொண் டார்.
அப்போது சபாநாயகர் பேசியதாவது :-

கடவுள் தந்த பரிசு...
மஞ்சுவாரியர் சிறந்த நடிகை. அவர் கேரளாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு.

துரதிருஷ்டவசமானது...
சில சூழ்நிலை காரணமாக அவர் 14 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டமானது.

வரப்பிரசாதம்...
அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து உள்ளது. கேரள மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்' எனத் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக...
14 வருடத்திற்கு பிறகு மஞ்சுவாரியர் நடித்து வெளியாகியுள்ள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











