பாவாடையை இழுத்து ஆடிய கெத்திகாவுக்கு அடித்தது ஜாக்பாட்.. அடுத்து அந்த டாப் ஹீரோ படத்தில் வாய்ப்பு!

ஹைதராபாத்: 29 வயதாகும் கெத்திகா ஷர்மாவுக்கு தற்போது டோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் டோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் அதிக ஆர்வத்தை செலுத்தி வரும் நிலையில், மிருணாள் தாகூர், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் கெத்திகா ஷர்மாவுக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறுகின்றனர்.

நித்தின் மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான ராபின்ஹுட் திரைப்படம் விமர்சன ரீதியாகவோ, வசூல் ரீதியாகவோ வெற்றிப் பெறவில்லை. ஆனால், அந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வெளியான 'அதீத சர்ப்ரைஸ்' பாடல் மட்டும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Ketika Sharma got a big acting chance in Ravi Teja s next after Adhidha Surpisu and Single movie hit

அந்த பாடலில் பாவாடையை இழுத்து படு மோசமான ஸ்டெப் போட்டு ஆடிய நிலையில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார் கெத்திகா ஷர்மா. ஆனால், அதையும் தாண்டி தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க முக்கிய காரணமே முதல் முறையாக அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான' சிங்கிள்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தான் காரணம் என்கின்றனர்.

யாரு இந்த கெத்திகா ஷர்மா?: சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் தான் சமீப காலமாக சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர். நிஹாரிகாவை போலவே இவரும் சோஷியல் மீடியாவில் இன்ஃப்ளூயன்சராக இருந்து வந்த நிலையில், 2021ம் ஆண்டு வெளியான ரொமான்டிக் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். லக்‌ஷயா, ரங்கா ரங்கா வைபவங்கா, ப்ரோ படங்களில் நடித்த இவருக்கு விஜய் 69 எனும் இந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்: ராபின்ஹுட் படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிலையில், கடந்த மே 9ம் தேதி கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு, இவானாவுடன் இணைந்து கெத்திகா ஷர்மா நடித்த சிங்கிள் திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக மாறியுள்ளது. சிறிய பட்ஜெட்டில் வெளியாகி 35 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் அள்ளியிருக்கிறது அந்த படம்.

குத்தாட்டத்தால் பாப்புலர்: சென்சாரே கெத்திகா ஷர்மா ஆடிய மோசமான நடன அசைவுகளுக்கு கிராப் போட்டு சென்சார் செய்த நிலையில், அவருக்கு இளைஞர்கள் மத்தியில் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் அதிகரித்துள்ளது. தமிழில் கயாடு லோஹரை போல தெலுங்கில் பலரது கண்களும் கெத்திகா ஷர்மா மீது விழுந்திருப்பதாக கூறுகின்ற்னர். அதீத சர்ப்ரைஸ் பாடல் இவருக்கு பல பட வாய்ப்புகளை சர்ப்ரைஸ் ஆக பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி தேஜா ஹீரோயின்: ஏற்கனவே மிஸ்டர் பச்சன் படத்தில் இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் உடன் ரவி தேஜா இணைந்து நடித்ததும் அவருடன் போட்ட டான்ஸும் அதிகளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ரவி தேஜாவின் அடுத்த படத்தில் கெத்திகா ஷர்மாவுக்கு சான்ஸ் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 29 வயதாகும் கெத்திகா ஷர்மாவுக்கு மேலும், சில பெரிய நடிகர்கள் படங்களில் இருந்து அழைப்பு வருவதாகவும் இப்போதைக்கு அவர் செம பிசியாக இருப்பதாகவும் டோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர். ரவி தேஜா படத்திலும் ஒரு தரமான ஆட்டம் பாட்டம் கெத்திகா ஷர்மாவுக்கு இருக்கும் என்பது உறுதியாகவே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X